எனக்கு கொரோனா தொற்று ஏற்படவில்லை – வைத்திலிங்கம் விளக்கம்
அதிமுக முன்னாள் அமைச்சர் வைத்திலிங்கம் தனக்கு கொரோனா தொற்று ஏதும் உறுதி செய்யப்படவில்லை என விளக்கம்.
தமிழகத்தில் கடந்த சில நாட்களாக கொரோனா தொற்று தீவிரமாக பரவி வரும் நிலையில், எதிர்க்கட்சித் தலைவர் எடப்பாடி பழனிசாமி மனைவி கொரோனா தொற்று உறுதி செய்யப்பட்டுள்ளது. இதனை தொடர்ந்து ஓ பன்னீர்செல்வத்தின் ஆதரவாளர் வைத்தியலிங்கத்துக்கு கொரோனா தொற்று உறுதி செய்யப்பட்டுள்ளதாகவும் அவர் தன்னை வீட்டில் தனிமைப்படுத்திக் கொண்டதாகவும் செய்திகள் வெளியானது.
இந்த நிலையில் அதிமுக முன்னாள் அமைச்சர் வைத்திலிங்கம் அவர்கள் தனக்கு கொரோனா தொற்று உறுதி செய்யப்பட்டதாக வெளியான தகவலை தொடர்ந்து, தனக்கு தொற்று எதுவும் ஏற்படவில்லை என்று விளக்கம் அளித்துள்ளார் .