பதவிக்காகவோ புகழ்ச்சிக்காகவோ அரசியலுக்கு வந்தவன் அல்ல நான் – இபிஎஸ் பேச்சு!

நம்பி கெட்டவர்கள் யாரும் இல்லை என அதிமுக பொதுச்செயலாளர் எடப்பாடி பழனிசாமி தெரிவித்துள்ளார்.

EdappadiPalaniswami

சென்னை : இன்று அதிமுக சார்பில் இஃப்தார் நோன்பு திறக்கும் நிகழ்ச்சி சென்னையில் நடைபெற்றது. அதில் கலந்து கொண்ட அதிமுக பொதுச்செயலாளர் எடப்பாடி பழனிசாமி பங்கேற்று நோன்பு திறந்து வைத்தார். அதன்பிறகு நிகழ்ச்சியில் பேசிய அவர் ” என்னை நம்பி கெட்டவர்கள் யாரும் இல்லை ” என பேசினார். இது குறித்து பேசிய அவர் ” பதவிக்காகவோ புகழ்ச்சிக்காகவோ அரசியலுக்கு வந்தவன் அல்ல நான். மக்களுக்காக தொண்டாற்ற அரசியலுக்கு வந்தவன்.

எனக்கென்று தனியாக கருதும், நிலைப்பாடும் இல்லை. ஜாதி மத வேறுபாட்டுக்கு அப்பாற்பட்டு தமிழனாக, இந்தியனாக வாழ்ந்து வருகிறேன். எல்லருக்கும் சம நீதியும், சம பாதுகாப்பும், சம உறுதியும் கிடைக்கவேண்டும் என்று நினைப்பவன் நான்.  என்னை நம்பாமல் கெட்டவர்கள் பலர் இருக்கலாம், ஆனால் நம்பி கெட்டவர்கள் யாரும் இல்லை. மக்களின் பன்முகத்தன்மையை முழுமையாக ஏற்கும் இயக்கம் என்றால் நம்மளுடைய அதிமுக தான்” எனவும் எடப்பாடி பழனிசாமி நெகிழ்ச்சியுடன் பேசினார்.

அதனை தொடர்ந்து பேசிய அவர் மறைந்த முன்னாள் முதல்வர் எம்.ஜி.ஆர் குறித்து சில விஷயங்களையும் பகிர்ந்துகொண்டார். இது தொடர்பாக பேசிய அவர் ” எம்.ஜி.ஆர் எனும் அந்த மகத்தான மனிதரை பார்த்து அவரை மிகவும் பிடித்து பிறகு தான் எனக்கு அரசியல் வரவேண்டும் என தோணியது. அதைப்போல அம்மா ஜெயலலிதா இஸ்லாமிய மார்க்கத்தை தவறாக சித்தரித்து திரைப்படங்களில் காட்சிகள் வெளிவந்த போதெல்லாம் உறுதிபட நின்று கடும் நடவடிக்கை எடுத்தவர் . அந்த ஒப்பற்ற இரு பெரும் தலைவர்களின் அரசியலிலே உருவாக்கப்பட்டவன் நான்.

என்னுடைய இதய சிம்மாசனத்தில் நீங்காத இடம்பிடித்திருக்கும் எம்.ஜி.ஆர் மற்றும் அம்மா ஜெயலலிதா என்ற இரு பெரும் தலைவர்களின் வழியில் நான் அரசியல் பயணம் செய்து வருகிறேன். அவர்களை போல உங்களுக்கு உற்ற நண்பனாக சகோதரனாக பாதுகாவலனாக இருப்பேன் என்று தெரிவித்து கொள்கிறேன்” எனவும் எடப்பாடி பழனிசாமி தெரிவித்தார்.

Follow us

Whatsapp Google News Youtube Facebook Facebook X (formerly Twitter) Twitter Instagram Instagram

லேட்டஸ்ட் செய்திகள்