படத்தில் நான் முதலமைச்சராக நடிக்கவில்லை….!நிஜத்தில் முதலமைச்சரானால் நடிக்க மாட்டேன்…!விஜய் அதிரடி

Default Image

சர்கார் படத்தில் நான் முதலமைச்சராக நடிக்கவில்லை, நிஜத்தில் முதலமைச்சரானால் நடிக்க மாட்டேன் என்று நடிகர் விஜய் தெரிவித்துள்ளார்.
முருகதாஸ் இயக்கியுள்ள சர்கார்  படத்தில் தளபதி விஜய் நடித்துள்ளார். இந்த படம் குறித்த மிகப்பெரிய எதிர்பார்ப்பு மக்கள் மத்தியில் அதிகமாக இருந்தது.
இப்படத்தின் இசை வெளியீட்டு விழா சென்னை சாய்ராம் கல்லூரியில் இன்று மாலை நடைபெற்றது .இசை வெளியீட்டு விழாவில் நடிகர் விஜய், ஏ.ஆர்.முருகதாஸ், கலாநிதிமாறன், ஏ.ஆர்.ரஹ்மான் உள்ளிட்ட படக்குழுவினர் கலந்து கொண்டனர். ஏற்கனவே ரகுமான் இசையமைத்து வெளியிடப்பட்ட 2 பாடல்களும் நல்ல வரவேற்ப்பை பெற்றது. மீதமுள்ள பாடல்கள் இன்று வெளியிடப்பட்டது.
டிஜிட்டல் தொழில்நுட்பமுறையில், அதற்காக பிரத்யேகமாக உருவாக்கப்பட்ட இணையதளமான www.sarkar.sunpicturs.in மூலம், விழாவில் கூடியிருந்த விஜய் ரசிகர்கள் தங்கள் கைகளில் வைத்திருந்த மொபைல்போன்களின் மூலம் அனைத்து பாடல்களையும், விஜய் ரசிகர்கள் தங்களது கைகளால் வெளியிட்டனர். இந்த முயற்சி ரசிகர்களை மகிழ்ச்சியில் ஆழ்த்தியுள்ளது. அந்த இணையதளத்தில் அனைத்துப் பாடல்களும் இருக்கின்றது .
 
இந்நிலையில் இந்த இசைவெளியீட்டு விழாவில் பேசிய நடிகர் விஜய் ,

மெர்சல்ல கொஞ்சம் அரசியல் இருந்தது சர்கார்ல  அரசியலை மெர்சல் பண்ணிருக்காரு இயக்குனர் முருகதாஸ். எல்லாரும் தேர்தல்ல நின்னுட்டு சர்கார் அமைப்பாங்க.ஆனா இங்க சர்கார் அமைச்சுட்டு தேர்தல்ல நிற்க போறோம்.மேலும் அவர் பேசுகையில் உசுப்பேத்துறவன்ட உம்முனு இருந்தா.. கடுப்பு ஏத்துறவன்ட கம்முன்னு இருந்தா… லைப் ஜம்முன்னு இருக்கும் என்று விஜய் அரசியலில் பேசி வெளுத்து வாங்கி இருக்கிறார்.
பின்னர் சர்கார்’ இசை வெளியீட்டு விழாவில் கற்பனை கேள்விகளை தொகுப்பாளரான நடிகர் பிரசன்னா கேட்டார் .அதற்கு பதில் அளித்த நடிகர் விஜய்,சர்கார் படத்தில் நான் முதலமைச்சராக நடிக்கவில்லை, நிஜத்தில் முதலமைச்சரானால் நடிக்க மாட்டேன்.மாநிலத்திற்கு நல்ல தலைவர்கள் தேவை.மேலிருக்கும் அதிகாரிகள், அமைச்சர்கள் நல்லவர்களாக இருந்தால், மாநிலம் தானாகவே நல்லதாக இருக்கும்.நான் முதல்வரானால் ஊழலை ஒழிக்க நடவடிக்கை எடுப்பேன் ; ஆனால் முடியுமா என தெரியவில்லை.நெருக்கடி ஏற்பட்டால் இயற்கையாக நல்ல தலைவர்கள் உருவாவார்கள். அவர்கள் அமைப்பார்கள் நல்ல சர்க்கார் என்று அதிரடியாக பேசியுள்ளார்.

Follow us

Whatsapp Google News Youtube Facebook Facebook X (formerly Twitter) Twitter Instagram Instagram

Leave a Reply

லேட்டஸ்ட் செய்திகள்