தார்மீக அடிப்படையில் எனது கடமையை செய்தேன் – கிரண் பேடி

தார்மீக அடிப்படையில் எனது கடமையை செய்தேன் என்று கிரண் பேடி தனது ட்விட்டர் பக்கத்தில் அறிக்கை வெளியிட்டுள்ளார்.
அரசின் நலத்திட்ட உதவிகளை தடுக்கிறார் என பல்வேறு புகார்களை கிரண்பேடி மீது புதுச்சேரி முதல்வர் நாராயணசாமி கடந்த வாரம் மத்திய உள்துறை மற்றும் குடியரசு தலைவரிடம் புகார் அளித்த நிலையில், நேற்று துணைநிலை ஆளுநர் பொறுப்பில் இருந்து கிரண் பேடி நீக்கம் செய்யப்பட்டார். தெலுங்கானா ஆளுநர் தமிழிசை சௌந்தராஜன் புதுச்சேரி மாநில துணை நிலை ஆளுநராக நியமனம் செய்யப்பட்டு, கூடுதல் பொறுப்பு வழங்கி குடியரசுத் தலைவர் ராம்நாத் கோவிந்த் அறிவித்திருந்தார்.
இந்நிலையில், ஆளுநர் பொறுப்பில் இருந்து நீக்கப்பட்ட கிரண் பேடி, புதுச்சேரியின் துணைநிலை ஆளுநராக அரசியலமைப்புக்கு உட்பட்டு தார்மீக அடிப்படையில் எனது கடமையை செய்தேன் என்றும் புதுச்சேரிக்கு நல்ல எதிர்காலம் உள்ளது. அது தற்போது மக்களின் கைகளில்தான் இருக்கிறது எனவும் அறிக்கையில் கூறியுள்ளார். மேலும, துணைநிலை ஆளுநர் பதவி அளித்து பணியாற்ற வாய்ப்பு அளித்த மத்திய அரசுக்கு நன்றி தெரிவிப்பதாகவும் தெரிவித்துள்ளார்.
Thank all those who were a part my journey as Lt Governor of Puducherry—
The People of Puducherry and all the Public officials. ???? pic.twitter.com/ckvwJ694qq— Kiran Bedi (@thekiranbedi) February 17, 2021