முதல் நிதிநிலை அறிக்கையிலேயே தேர்தல் வாக்குறுதியை நிறைவேற்றியதற்காக தமிழக முதலமைச்சரை பாராட்டிய கேஎஸ் அழகிரி.
இதுதொடர்பாக தமிழக காங்கிரஸ் கமிட்டி தலைவர் கேஎஸ் அழகிரி தனது ட்விட்டர் பக்கத்தில் பதிவிட்டுள்ளார். அதில், தமிழ்நாடு அரசின் 2021-22 ஆம் ஆண்டிற்கான திருத்த நிதிநிலை அறிக்கை, தேர்தல் நேரத்தில் தி.மு.க. கொடுத்த வாக்குறுதிகளை நிறைவேற்றுவதற்கு மேற்கொள்ளும் தீவிரமான முயற்சிகளை வெளிப்படுத்துகிறது.
தமிழகத்தில் 2.63 கோடி இருசக்கர வாகன ஓட்டிகள் பயன்பெறும் வகையில், ஒரு லிட்டர் பெட்ரோலுக்கு ரூ. 3 வரியை குறைத்ததன் மூலம், முதல் நிதிநிலை அறிக்கையிலேயே தேர்தல் வாக்குறுதியை நிறைவேற்றியதற்காக தமிழக முதலமைச்சரை பாராட்டுகிறேன்.
தமிழக அரசு விரைவில் புதிய கல்வி கொள்கையை அறிவிக்கும் என கூறியதோடு ரூ.32,591 கோடி நிதி ஒதுக்கீடு செய்யப்பட்டுள்ளது. கல்வி கற்பிக்கும் முறையில் அடிப்படை மாற்றங்கள் செய்து ஆசிரியர்களின் கற்பிக்கும் திறனை வளர்க்க தீவிர நடவடிக்கை எடுக்கப்படும் என அறிவித்திருப்பது வரவேற்புக்குரியது
தமிழகத்தை முன்னேற்றப் பாதையில் அழைத்துச் செல்கிற மகத்தான பயணத்தை மேற்கொண்டிருக்கும் தமிழக முதலமைச்சர் தளபதி மு.க ஸ்டாலின் அவர்களையும், அவரது நோக்கம் நிறைவேற பெரும் துணையாக இருக்கிற நிதியமைச்சர் பழனிவேல் தியாகராஜன் அவர்களையும் தமிழக காங்கிரஸ் கமிட்டி சார்பில் பாராட்டுகிறேன் என்று தெரிவித்துள்ளார்.
மும்பை : ஐபிஎல் 2025-ன் 33வது போட்டி மும்பை இந்தியன்ஸ் மற்றும் சன்ரைசர்ஸ் ஹைதராபாத் அணிகளுக்கு இடையே நடைபெற்றது. முதலில்…
மும்பை : மும்பை வான்கடே மைதானத்தில் மும்பை இந்தியன்ஸ் மற்றும் சன்ரைசர்ஸ் ஹைதராபாத் அணிகளுக்கு இடையே நடைபெற்று வருகிறது. டாஸ்…
மும்பை : இன்றைய லீக் ஆட்டத்தில், மும்பை இந்தியன்ஸ் மற்றும் சன்ரைசர்ஸ் ஹைதராபாத் அணிகளுக்கு இடையே நடைபெற உள்ளது. இந்த…
பெல்ஜியம்: GT4 தொடர் விரைவில் தொடங்கவுள்ள நிலையில், அஜித் குமாரின் பந்தயக் குழு பெல்ஜியத்தின் புகழ்பெற்ற சர்க்யூட் டி ஸ்பாவிற்கு…
சென்னை : கடந்த ஏப்ரல் 8 ஆம் தேதி, தந்தை பெரியார் திராவிடர் கழகம் நடத்திய ஈ.வி. ராமசாமியை (பெரியார்)…
சென்னை : வக்ஃப் திருத்த சட்டத்தின்படி புதிய உறுப்பினர்களை நியமனம் செய்யக் கூடாது என உச்ச நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது. மேலும்,…