‘விஜய் திறந்து வைத்திருந்த கூட்டணி கதவையும் நான் மூடினேன்’ – திருமாவளவன்.!
ஆசை வார்த்தைகள் கூறி என்னை வீழ்த்தி விட முடியாது. நீங்கள் நினைக்குற சராசரி அரசியல்வாதி அல்ல நான் என்று திருமாவளவன் பேசியிருக்கிறார்.

திருபுவனை : புதுச்சேரி மாநிலம் திருபுவனையில் புரட்சியாளர் அம்பேத்கர் திருஉருவச் சிலையை நேற்று திறந்துவைத்தார். இவ்விழாவில் மே 17 இயக்கத்தின் ஒருங்கிணைப்பாளர் திருமுருகன் காந்தி, திரைக்கலைஞர் தீனா மற்றும் விசிக முன்னணி பொறுப்பாளர்கள் உள்ளிட்ட ஏராளமானோர் பங்கேற்று சிறப்பித்தனர்.
இந்த நிகழ்வில் பேசிய, விசிக தலைவர் திருமாவளவன், ”ஆட்சி அதிகாரத்தில் பங்கு, துணை முதல்வர் பதவி என்று ஆசை வார்த்தைகள் கூறி என்னை வீழ்த்தி விட முடியாது. கூட்டணி தர்மத்துக்காக விஜய் திறந்து வைத்த கதவையும் மூடினேன். பாமகவுடனும் சேரமாட்டோம், பாஜகவுடனும் சேரமாட்டோம், அந்த கட்சிகள் இடம்பெறும் கூட்டணியிலும் சேரமாட்டோம். இதனால் எந்த பாதிப்பு வந்தாலும் ‘I Don’ t Care’. நீங்கள் நினைக்கிற சராசரி அரசியல்வாதி அல்ல இந்த திருமாவளவன்.
கூட்டணியில் இருந்தாலும் இது வரையிலும் ஒரு பிரச்சனையிலும் விசிக பின்வாங்கியதில்லை. திமுக அரசை எதிர்த்து, காவல் துறையை எதிர்த்து, விடுதலைச்சிறுத்தைகள் போல் போராடிய கட்சி ஒரு கட்சியும் கிடையாது. அடுக்க முடியும், பட்டியல் போட முடியும். ஒருபோதும் இந்த கொடுமைகளை விசிக வேடிக்கை பார்த்ததில்லை” என்று கூறியுள்ளார்.