நான் ஸ்டாலினுக்கு சவால் விடுகிறேன் , துண்டுச் சீட்டு இல்லாமல் அழைத்தால் தயார் – முதலமைச்சர் பழனிசாமி சவால்

எந்த இடத்திற்கும் துண்டுச் சீட்டு இல்லாமல் மு.க.ஸ்டாலின் அழைத்தால் வருவதற்கு நான் தயார் என்று முதலமைச்சர் பழனிசாமி தெரிவித்துள்ளார்.
முதலமைச்சர் பழனிசாமி ஈரோடு மாவட்டத்தில் பிரச்சாரம் மேற்கொண்டார்.அப்பொழுது அவர் பேசுகையில்,இந்த ஆட்சியில் எங்கு ஊழல் நடந்துள்ளது என்று கூற வேண்டும்.ஊழல் குறித்து பேச நாங்கள் தயார்.ஸ்டாலினுக்கு ஊழல் பற்றி பேச அருகதை இல்லை.அதிமுகவின் அமைச்சர்கள் சிறையில் களி தின்பார்கள் என்று ஸ்டாலின் கூறிவருகிறார் . எங்களது மடியில் கனமில்லை.அதனால் போகும் வழியில் எந்த பயமும் இல்லை.நான் இப்போது திமுக தலைவர் ஸ்டாலினை நேரடி விவாதத்துக்கு அழைக்கிறேன்.தைரியம் இருந்தால் ஒரு கட்சியின் தலைவராக ஸ்டாலின் எந்த இடத்திற்கும் வரலாம்.நான் ஸ்டாலினுக்கு சவால் விடுகிறேன்.எந்த இடத்திற்கும் துண்டுச் சீட்டு இல்லாமல் மு.க.ஸ்டாலின் அழைத்தால் வருவதற்கு நான் தயார்.ஊழல் குறித்து கேள்வி கேட்டால் பதில் அளிக்கத் தயாராக இருக்கிறேன்.நாட்டிலே ஊழலுக்காக கலைக்கப்பட்ட ஆட்சி திமுக ஆட்சிதான்.முதலில் திமுக உடையாமல் ஸ்டாலின் காப்பற்றிக்கொள்ளட்டும் என்று பேசியுள்ளார்.
லேட்டஸ்ட் செய்திகள்
“பொறுமைக்கும் எல்லை உண்டு.., வரம்பு மீறி போறீங்க.!” சேகர்பாபு மீது அண்ணாமலை கடும் விமர்சனம்!
April 17, 2025
அதிமுக – பாஜக : “கூட்டணி தான் ஆனால் கூட்டணி ஆட்சி இல்லை” – தம்பிதுரை பரபரப்பு விளக்கம்!
April 17, 2025