‘எனக்கு காது கேட்காது’- திருமணம் செய்ய மறுத்த பெண் தூக்கிட்டு தற்கொலை!

Published by
லீனா

திருமணம்  வேண்டாம் என கூறிய பெண்ணை சமாதானப்படுத்தி திருமணத்திற்கு சம்மதிக்க வைத்த பெற்றோரால், தற்கொலை செய்துகொண்ட பெண். 

தூத்துக்குடியை சேர்ந்த சுடலையாண்டி என்பவருக்கும் இரண்டு மகள்கள் மற்றும் ஒரு மகன் உள்ளனர். இவர்கள் அப்பகுதியில் டீக்கடை ஒன்றை நடத்தி வருகின்றனர். இந்நிலையில் சுடலையாண்டி இளையமகள் விஜயலட்சுமிக்கு வருகின்ற 10ஆம் தேதி திருமணம் நடைபெற இருந்தது. நேற்று அதிகாலை வழக்கம்போல் சுடலையாண்டி அவரது மனைவி இருவரும் அவர்களது டீக்கடைக்கு சென்று விட்டனர்.

இதனை அடுத்து, சுடலையாண்டி மூத்த மகள் எழுந்து சமையலறைக்கு வந்துள்ளார். அப்போது அவரது தங்கையான விஜயலட்சுமி சேலையில் தூக்கிட்டு தற்கொலை செய்துள்ளார்.இதனை பார்த்த அவர் அதிர்ச்சியில் அலறல் சத்தம் போட்டுள்ளார்.  சத்தம் கேட்டு அக்கம்பக்கத்தினர் ஓடி வர, இதுகுறித்து தகவல் அறிந்த பெற்றோரும் பதறியடித்துக்கொண்டு ஓடிவந்து மகளின் உடலை பார்த்து கதறி அழுதுள்ளனர்.

இந்நிலையில், இதுகுறித்து போலீசாருக்கு தகவல் கொடுக்கப்பட்டதையடுத்து, சம்பவ இடத்திற்கு விரைந்த போலீசார் விசாரணை மேற்கொண்டனர். இந்த விசாரணையில் விஜயலட்சுமி தனது குடும்பத்தாரிடம், தனக்கு காது சரிவரக் கேட்காது. இந்த பிரச்சினை இருப்பதால், எனக்கு திருமணம் வேண்டாம் என்று கூறி வந்ததாக கூறப்படுகிறது. ஆனால் குடும்பத்தினர் அவரை சமாதானப்படுத்தி திருமணத்துக்கு சம்மதிக்க வைத்ததாகவும், இதனால் விஜயலட்சுமி தூக்கு போட்டு தற்கொலை செய்து கொண்டுள்ளார் என்றும் கூறப்படுகிறது.

Published by
லீனா

Recent Posts

“இதற்காகவே நாங்கள் பெரியாரை கொண்டாடுகிறோம்” நிர்மலா சீதாராமனுக்கு பதில் கொடுத்த விஜய்!

“இதற்காகவே நாங்கள் பெரியாரை கொண்டாடுகிறோம்” நிர்மலா சீதாராமனுக்கு பதில் கொடுத்த விஜய்!

சென்னை : பட்ஜெட் கூட்டத்தொடரின் இரண்டாம் கட்ட அமர்வு டெல்லி நாடாளுமன்றத்தில் நேற்று முன்தினம் தொடங்கி நடைபெற்று வருகிறது. இந்த…

53 minutes ago

இது எங்க காலம்.! ஐசிசி தரவரிசையில் எகிறி அடிக்கும் இந்திய கிரிக்கெட் வீரர்கள்!

டெல்லி : அண்மையில் பாகிஸ்தான் மற்றும் துபாயில் நடைபெற்ற சாம்பியன்ஸ் டிராபியை கைப்பற்றிய கொண்டாட்டத்தில் இந்திய அணி வீரர்கள் இருக்கும்…

1 hour ago

30 பேர் சுட்டுக்கொலை! 190 பேர் மீட்பு! மற்றவர்கள் நிலை? பாக். ரயில் கடத்தல் அப்டேட்…

இஸ்லாமாபாத்  : பாகிஸ்தானில் பலுசிஸ்தான் மாகாண தலைநகர் குவெட்டாவிலிருந்து வடக்கு நகரமான பெஷாவருக்கு சென்று கொண்டிருந்த பயணிகள் ரயிலை நேற்று…

2 hours ago

யாருக்கு அறிவில்லை? அமைச்சர் பி.டி.ஆர் vs அண்ணாமலை வார்த்தை போர்!

சென்னை : தேசிய கல்வி கொள்கையை ஆதரிக்கும் வகையில் உள்ள PM Shri திட்டத்தில் தமிழகத்தை இணைக்க மத்திய அரசு…

3 hours ago

மார்ச் 22-ஐ குறிவைத்து காத்திருக்கும் திமுக! பல்வேறு மாநில ஆளும்கட்சி, எதிர்க்கட்சிகளுக்கு அழைப்பு!

சென்னை : மக்கள் தொகை அடிப்படையில் மக்களவை தொகுதிகள் மறுசீரமைப்பு செய்யப்பட உள்ளதாக திமுக தொடர்ந்து கூறிவருகிறது. இந்த தொகுதி…

5 hours ago

பங்கு நானும் வரேன்.., ஏர்டெலை தொடர்ந்து ஜியோ-வின் ‘ஸ்டார்லிங்க்’ சம்பவம்!

டெல்லி : அதிவேக இன்டர்நெட், நகர்ப்புறம் முதல் கிராமப்புறம் வரையில் தடையில்லா இணைய சேவை உள்ளிட்டவற்றை நோக்கமாக கொண்டு இந்திய …

6 hours ago