திராவிட சித்தாந்தத்தை நம்புகிறவன் நான்…! ஸ்டாலினை சந்தித்த எழுத்தாளர் இமயம்…!
அரசியலில் எனக்கு சம்பந்தமில்லை என்று கூறும் எழுத்தாளர்கள் மீது எனக்கு மதிப்பில்லை. திராவிட சித்தாந்தத்தை நம்புகிறவன் நான்.
சாகித்ய அகாடமி விருது பெற்ற எழுத்தாளர் இமையம் சென்னையில் திமுக தலைவர் ஸடாலினை சந்தித்து வாழ்த்து பெற்றார். அதன் பின் செய்தியாளர்களை சந்தித்து பேசிய அவர், என்னுடைய எழுத்துக்கும், என்னுடைய வாழ்க்கைக்கும் அரசியல் சம்பந்தமில்லை என்று சொல்லும் எழுத்தாளர்கள் மத்தியில், என்னுடைய எழுத்து முழுக்க முழுக்க அரசியல் தன்மை கொண்டது என்று தெரிவித்துள்ளார்.
மேலும் அவர் கூறுகையில், அரசியலை எழுதாதவன் எழுத்தாளன் இல்லை என்கின்ற நிலைப்பாட்டில் உள்ளவன் நான். அந்த வகையில் என்னுடைய எழுத்து, சமூகத்தை பற்றியது, சமூகத்தில் நடக்க கூடிய அரசியலை பற்றியது. எனவே அரசியலில் எனக்கு சம்பந்தமில்லை என்று கூறும் எழுத்தாளர்கள் மீது எனக்கு மதிப்பில்லை. திராவிட சித்தாந்தத்தை நம்புகிறவன் நான் என்றும் அவர் தெரிவித்துள்ளார்.