மத்திய அரசால் சமீபத்தில் கொண்டுவரப்பட்ட குடியுரிமை திருத்த மசோதா சட்டத்திற்கு எதிராக நாடு முழுவதும் போராட்டம் வெடித்தது. பின்னர் குடியுரிமை திருத்த சட்டத்தால் இந்தியர்களுக்கு எந்த பாதிப்பும் இல்லை என மத்திய அரசு தொடர்ந்து விளக்கம் அளித்து வந்தது. எனினும், போராட்டங்கள் மற்றும் பேரணிகள் பல இடங்களில் நடைபெறுவாரே இருந்தது. இந்த நிலையில், கேரளா, பஞ்சாப் உள்ளிட்ட மாநிலங்களில் குடியுரிமை திருத்த சட்டத்திற்கு எதிரான தீர்மானம் நிறைவேற்றப்பட்டன. அதனை அடுத்து, ராஜஸ்தானிலும் குடியுரிமை திருத்த சட்டத்திற்கு எதிரான தீர்மானம் கொண்டுவரப்படும் என அந்த மாநிலத்தின் துணை முதல்வர் சச்சின் பைலட் தெரிவித்துள்ளார்.
இந்நிலையில், பிரதமர் நரேந்திர மோடியின் சகோதரர் பிரகலாத் தாமோதரதாஸ் மோடி நேற்று ராமேசுவரம் வந்தார். ராமநாத சாமியை தரிசனம் செய்த பின்னர் செய்தியாளர்களை சந்தித்து பேசிய அவர், நேற்று தை அமாவாசை முன்னிட்டு ராமேசுவரம் ராமநாத சாமியை தரிசனம் செய்தது மகிழ்ச்சி அளிக்கிறது. தொடர்ந்து, அனைத்து மக்களும் உடல் நலத்துடன் நன்றாக இருக்க வேண்டும் என வேண்டிக் கொண்டதாக கூறினார். மேலும், குடியுரிமை சட்ட திருத்தத்தை யாரும் எதிர்க்க வேண்டாம். அது நாட்டு மக்களுக்கு நன்மை தரக்கூடிய சட்டம் அதை புரிந்துகொள்ளாமல் சிலர் எதிர்ப்பதாக விமர்சித்தார். குடியுரிமை சட்ட திருத்தத்தை எதிர்ப்பவர்களுக்கு நல்ல புத்தியை கொடுக்கும்படி சாமியிடம் வேண்டிக் கொண்டேன் என தெரிவித்தார்.
சென்னை : பழம்பெரும் பின்னணிப் பாடகர் கே.ஜே. யேசுதாஸ், வயது மூப்பு தொடர்பான உடல்நலக் குறைபாடுகள் காரணமாக சென்னையில் மருத்துவமனையில்…
சென்னை : நடிகை வழக்கில் நாம் தமிழர் கட்சித் தலைவர் சீமான் நேரில் ஆஜராகவில்லை என்று சென்னை வளசரவாக்கம் போலீசார்,…
பாகிஸ்தான் : சாம்பியன்ஸ் டிராஃபி தொடரில், இன்று நடைபெற இருந்த பாகிஸ்தான்-வங்கதேசம் இடையிலான 9வது போட்டி கைவிடப்பட்டது. ராவல்பிண்டி பகுதியில்…
சென்னை : நடிகை விஜயலட்சுமி கொடுத்த புகாரின் பெயரில் சென்னை வளசரவாக்கம் போலீசார் சீமான், விசாரணைக்கு நேரில் ஆஜராக வேண்டும்…
சென்னை : இயக்குநர் ஆதிக் ரவிச்சந்திரன் இயக்கத்தில் அஜித்குமார் நடிக்கும் ”குட் பேட் அக்லி” திரைப்படத்தின் டீஸர் நாளை இரவு…
பாகிஸ்தான் : சாம்பியன்ஸ் டிராபி தொடரில் பாகிஸ்தான் - வங்காளதேச அணிகள் இன்று மோதுகின்றன. குரூப் ஏ பிரிவில் இருந்து…