ராம கோபாலன் மறைவெய்திய செய்தியால் மிகுந்த வருத்தமுற்றேன் – மு.க. ஸ்டாலின்
ராம கோபாலன் மறைவெய்திய செய்தியால் மிகுந்த வருத்தமுற்றேன் என்று மு.க. ஸ்டாலின் தெரிவித்துள்ளார்.
கடந்த சில தினங்களுக்கு முன்பு இந்து முன்னணி தலைவர் ராமகோபாலன் சளித்தொல்லை காரணமாக சென்னை ராமச்சந்திரமிஷன் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டார்.முதல் பரிசோதனையில் கொரானா தொற்று இல்லை என்று தெரிய வந்தது. இரண்டாவதாக எடுத்த பரிசோதனையில் கொரானா தொற்று உறுதி செய்யப்பட்டது.சிகிச்சை பெற்று வந்த நிலையில், சிகிச்சை பலனின்றி ராமகோபாலன் உயிரிழந்தார்.
இந்நிலையில் இது குறித்து திமுக தலைவர் மு.க.ஸ்டாலின் தனது ட்விட்டர் பக்கத்தில் பதிவிட்டுள்ள பதிவில்,இந்து முன்னணியின் நிறுவனத் தலைவர் திரு. ராம கோபாலன் மறைவெய்திய செய்தியால் மிகுந்த வருத்தமுற்றேன். சித்தாந்த வேறுபாடுகள் இருந்தாலும் முத்தமிழறிஞர் கலைஞரின் நல்ல நண்பர்! பெரியவரை இழந்து வாடும் இந்து முன்னணியினருக்கு எனது ஆழ்ந்த அனுதாபத்தையும், ஆறுதலையும் தெரிவித்துக் கொள்கிறேன் என்று தெரிவித்துள்ளார்.
இந்து முன்னணியின் நிறுவனத் தலைவர் திரு. ராம கோபாலன் மறைவெய்திய செய்தியால் மிகுந்த வருத்தமுற்றேன்.
சித்தாந்த வேறுபாடுகள் இருந்தாலும் முத்தமிழறிஞர் கலைஞரின் நல்ல நண்பர்!
பெரியவரை இழந்து வாடும் இந்து முன்னணியினருக்கு எனது ஆழ்ந்த அனுதாபத்தையும், ஆறுதலையும் தெரிவித்துக் கொள்கிறேன். pic.twitter.com/eIa8oFMjaL
— M.K.Stalin (@mkstalin) September 30, 2020