யாழ்ப்பாணத்துக்கு சென்ற ஒரே இந்திய பிரதமர் நான் – பிரதமர் மோடி

Default Image

இலங்கையில் வாழும் தமிழர்களின் நலனை பாதுகாக்க மத்திய அரசு நடவடிக்கை எடுக்கப்படும் என பிரதமர் மோடி தெரிவித்துள்ளார்.

சென்னை நேரு உள்விளையாட்டரங்கில் நடைபெற்ற நிகழ்ச்சியில், தமிழகத்தில் ரூ.8,126 கோடி மதிப்பிலான பல்வேறு திட்டங்களை தொடங்கி வைத்த பின்னர் பேசிய பிரதமர் மோடி, இலங்கையில் வாழும் தமிழர்களின் நலனை பாதுகாக்க மத்திய அரசு நடவடிக்கை எடுக்கப்படும் என்றும் யாழ்ப்பாணத்துக்கு சென்ற ஒரே இந்திய பிரதமர் நான் எனவும் குறிப்பிட்டார்.

வளர்ச்சி பணிகள் மூலம் ஈழத் தமிழர் நலன்களை உறுதி செய்து வருகிறோம். யாழ். – மன்னார் ரயில் பாதை சீரமைக்கப்பட்டு வருகிறது என்றும் சென்னை- யாழ்ப்பாணம் இடையே விமான சேவை இயக்கப்படுகிறது எனவும் கூறியுள்ளார். யாழ் கலாசார மையம் விரைவில் திறக்கப்படும். ஈழத் தமிழர்கள் சமத்துவம், சம உரிமையுடன் வாழ்வதை உறுதி செய்வோம் என்றும் தெரிவித்துள்ளார்.

ஈழத் தமிழர்களுக்கு இதுவரை 50,000 வீடுகள் கட்டி கொடுத்துள்ளோம். மலையகத் தமிழர்களுக்கு 4,000 வீடுகள் கட்டி கொடுத்துள்ளோம். எங்கள் ஆட்சியில் 1600க்கும் மேற்பட்டவர்கள் விடுதலை செய்யப்பட்டுள்ளனர். இலங்கை சிறையில் ஒரு மீனவர் கூட இல்லை-313 படகுகள் விடுவிக்கப்பட்டுள்ளன என பிரதமர் பேசியுள்ளார்.

மீனவர்கள் பிரச்சனை நீண்ட காலமாக இருக்கிறது. மீனவர் பிரச்சனையின் வரலாற்றுக்குள் செல்லவில்லை. இலங்கை அரசால் மீனவர்கள் கைது செய்யப்பட்டால் விடுதலை செய்வதை உறுதி செய்திருக்கிறோம். மீனவர்களின் உரிமைகளை பாதுகாப்போம் என உறுதிபட பிரதமர் தெரிவித்துள்ளார்.

Follow us

Whatsapp Google News Youtube Facebook Facebook X (formerly Twitter) Twitter Instagram Instagram

லேட்டஸ்ட் செய்திகள்