எம்ஜிஆரின் அடுத்த வாரிசு நான்தான்- ம.நீ.ம தலைவர் கமல்ஹாசன்

Default Image

எம்ஜிஆரின் அடுத்த வாரிசு நான்தான். நிரந்தரம் என்பது எதிலும் இல்லை, யாரும் கிடையாது என்று மக்கள் நீதி மய்யம் தலைவர் கமல்ஹாசன் பரப்புரையில் பேச்சு.

சீரமைப்போம் தமிழகத்தை என்ற பெயரில் 4வது நாளாக தேர்தல் சுற்றுப்பயணம் மேற்கொண்டு வரும் மக்கள் நீதி மய்யம் தலைவர் கமல்ஹாசன், நெல்லை கன்னியாகுமரி போன்ற மாவட்டங்களில் தேர்தல் பரப்புரையை மேற்கொண்டு வருகிறார். அப்போது நாகர்கோவிலில் பேசிய கமல்ஹாசன், எம்ஜிஆரின் அடுத்த வாரிசு நான்தான். நிரந்தரம் என்பது எதிலும் இல்லை, யாரும் கிடையாது.

நடுநிலை என்பதை நான் காப்பி அடிக்கவில்லை. அது என் முப்பாட்டன் வள்ளுவன் வழி. அதுவே என் வழி. தண்ணீரை காசுக்கு விற்கும் அரசு நல்ல அரசு இல்லை என்று குற்றசாட்டியுள்ளார். குரல் கொடுக்கும் தாகம் இருந்தும் கொடுக்காமல் இருந்து விட்டேன், அதனை சரிசெய்ய தற்போது வந்துள்ளேன் என்று தெரிவித்துள்ளார்.

எம்ஜிஆரை பார்க்காதவர்கள் எல்லாம் இன்று அமைச்சர்களாக உள்ளனர். என்னை போல பல நடிகர்கள் அதிமுகவில் உள்ளனர். நான் கடமையை செய்ய வந்தவன், காசு வாங்க வந்தவன் அல்ல. வரும் சட்டமன்ற தேர்தலில் எனது தலைமையில் மூன்றாவது அணி கட்டாயம் அமையும். நல்லவர்களோடு இணைந்த 3வது அணி அமைப்போம்.  ரஜினியோடு கூட்டணி அமையும் பட்சத்தில் இருவரில் யார் முதல்வர் என்பதை பேசி முடிவெடுப்போம் என்று தெரிவித்திருந்தார்.

இதனிடையே, எம்.ஜி.ஆர். பேரை சொல்லி அதிமுக ஓட்டுகளை கலைக்க முடியாது என்று கமலுக்குப் பதிலளிக்கும் வகையில் மீன்வளத்துறை அமைச்சர் ஜெயக்குமார் தெரிவித்திருந்தார். கமல் முதலில் தனியாக நிற்பேன் என்று சொன்னவர், தற்போது ஆள்பிடிக்கும் வேலையில் ஈடுபட்டுள்ளார். எம்.ஜி.ஆர் மீது உண்மையில் கமலுக்கு பக்தி இருக்குமேயானால் அவரை புரட்சித் தலைவர் என்றுதான் அழைத்திருக்க வேண்டும் என்று பேசியுள்ளார்.

Follow us

Whatsapp Google News Youtube Facebook Facebook X (formerly Twitter) Twitter Instagram Instagram

லேட்டஸ்ட் செய்திகள்