ஆதரித்த நான் பாமகவுக்கு எதிரி…எதிர்த்த பாஜக நண்பனா? – திருமாவளவன் கேள்வி

தமிழகத்தில் அதிமுக மற்றும் பாமகவின் முதுகில் ஏறி பாஜக ஆட்சி செய்கிறது என்று விடுதலை சிறுத்தைகள் கட்சி தலைவர் திருமாவளவன் தெரிவித்துள்ளார்.
சிதம்பரம் சட்டமன்ற தொகுதியில் திமுக கூட்டணியில் போட்டியிடும் இந்திய யூனியன் முஸ்லிம் லீக் கட்சி வேட்பாளர் அப்துல் ரஹ்மானை ஆதரித்து, விடுதலை சிறுத்தைகள் கட்சி தலைவர் தொல்.திருமாவளவன் பிரச்சாரத்தில் ஈடுபட்டார். அப்போது பேசிய அவர், தமிழகத்தில் அதிமுக மற்றும் பாமகவின் முதுகில் ஏறி பாஜக ஆட்சி செய்கிறது என தெரிவித்துள்ளார்.
மேலும் பிற்படுத்தப்பட்டோருக்கான இட ஒதுக்கீட்டை ஆதரித்த நான் பாமகவுக்கு எதிரி என்றும் இட ஒதுக்கீட்டை எதிர்த்த பாஜக நண்பனா? எனவும் கேள்வி எழுப்பியுள்ளார். சாதி மதத்தை தூண்டி பாஜக, பாமக ஆகிய கட்சிகள் அரசியல் செய்கிறது. சமூகநீதியை சீர்குலைக்க நினைக்கும் பாஜகவை வீழ்த்த வேண்டும் என பரப்புரையில் தெரிவித்துள்ளார் என்பது குறிப்பிடப்படுகிறது.
லேட்டஸ்ட் செய்திகள்
டார்கெட் முடிக்காத ஊழியர்கள்… நாயை போல் அலைய வைத்து கொடுமைப்படுத்திய தனியார் நிறுவனம்.!
April 6, 2025
திறப்பு விழா அன்றே பழுது..! பிரதமர் மோடி திறந்து வைத்த பாம்பன் பாலத்தின் தற்போதைய நிலை என்ன?
April 6, 2025
வேட்டி சட்டையில் என்ட்ரி.! பாம்பனில் புதிய ரயில் பாலத்தை பிரதமர் மோடி திறந்து வைத்தார்!
April 6, 2025
நடிகர் ஸ்ரீதர் மறைவு: சினிமா பிரபலங்கள் அஞ்சலி.!
April 6, 2025