இன்று ஸ்ரீராம நவமி என்பதை சொல்லி அமர்கிறேன் – நாகேந்திரன்
பாஜக சட்டமன்ற தலைவர் நயினார் நாகேந்திரன் இன்று ஸ்ரீராம நவமி என்பதை சொல்லி அமர்கிறேன் என பேச்சு.
தமிழக முதல்வர் மு.க.ஸ்டாலின் அவர்கள் 110 விதியின் கீழ் பேரவையில் உரையாற்றினார். பேசிய அவர், வைக்கம் போராட்டம் தொடங்கிய நூற்றாண்டின் தொடக்க நாள் இன்று; வரலாற்றின் முழு முக்கியமான நாள் வைக்கம் போராட்டம் வெற்றி பெறக் காரணமாக இருந்த பெரியாரை போற்றும் விதமாக வரலாற்று சிறப்பு மிக்க அறிவிப்பை வெளியிடுகிறேன்.
வைக்கம் ஆலய நுழைவுப் போராட்டத்தின் நூற்றாண்டு விழாவை தமிழ்நாடு அரசு சிறப்பாக கொண்டாட இருக்கிறது. ஓராண்டு முழுவதும் அப்போராட்டத்தின் நோக்கத்தையும், வெற்றியையும் பொதுமக்கள், மாணவர்கள் தெரிந்துகொள்ளும் வகையில் நிகழ்ச்சி நடத்தப்படும்.
இன்று ஸ்ரீராம நவமி
கேரளாவில் வைக்கம் போராட்ட நூற்றாண்டு விழாவில் முதல்வர் பினராய் விஜயனுடன் பங்கேற்கிறேன் என தெரிவித்திருந்தார். இந்த நிலையில், பேரவையில் பேசிய பாஜக சட்டமன்ற தலைவர் நயினார் நாகேந்திரன் இன்று ஸ்ரீராம நவமி என்பதை சொல்லி அமர்கிறேன் என பேசியுள்ளார்.