பிரணாப் முகர்ஜி காலமானார் என்ற செய்தியறிந்து வருத்தமடைந்தேன் – டிடி தினகரன்
இந்தியாவின் முன்னாள் குடியரசுத் தலைவர் பிரணாப் முகர்ஜி காலமானார் என்ற செய்தியறிந்து வருத்தமடைந்தேன் – டிடி தினகரன்.
கொரோனாவால் கடந்த சில நாட்களாக மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வந்த, முன்னாள் குடியரசுத் தலைவர் பிரணாப் முகர்ஜி சிகிச்சை பலனின்றி காலமானார். அவர் உயிரிழந்த செய்தியை அவரின் மகன் தனது ட்விட்டர் பக்கத்தில் பதிவிட்டுள்ளார். பிரணாப் முகர்ஜி மறைவிற்கு அரசியல் தலைவர்கள், பிரபலங்கள் மற்றும் பொதுமக்கள் என பலரும் இரங்கல் தெரிவித்து வருகின்றனர். இந்நிலையில், அம்மா மக்கள் முன்னேற்ற கழக பொதுச்செயலாளர் டிடிவி தினகரன் இரங்கலை தெரிவித்துள்ளார்.
இதுகுறித்து அவர் கூறுகையில், இந்தியாவின் முன்னாள் குடியரசுத் தலைவர் பாரதரத்னா பிரணாப் முகர்ஜி காலமானார் என்ற செய்தியறிந்து வருத்தமடைந்தேன். அவர், தலைசிறந்த ராஜதந்திரியாக அனைவராலும் பாராட்டத்தக்க நிர்வாகியாக, வாதத்திறமையுள்ள நாடாளுமன்றவாதியாக இந்த தேசத்திற்கு முக்கியமான பங்களிப்பை செய்தவர். அன்னாரது மறைவால் வாடும் குடும்பத்தினருக்கும், நண்பர்களுக்கும் ஆழ்ந்த இரங்கலைத் தெரிவித்துக்கொள்கிறேன் என்று கூறியுள்ளார்.
இந்தியாவின் முன்னாள் குடியரசுத் தலைவர் பாரதரத்னா திரு.பிரணாப் முகர்ஜி அவர்கள் காலமானார் என்ற செய்தியறிந்து வருத்தமடைந்தேன்.#PranabMukherjee
— TTV Dhinakaran (@TTVDhinakaran) August 31, 2020