திருப்பரங்குன்றம் இடைத்தேர்தல் வழக்கு: வழக்கை வாபஸ் பெற தயாராக இருக்கிறேன் !!திமுக பி.சரவணன்

Published by
Venu
  • அதிமுக வெற்றி பெற்றதை எதிர்த்து திமுக வேட்பாளர் டாக்டர் பி.சரவணன், உயர்நீதிமன்றத்தில் மனு தாக்கல் செய்தார்.
  • தான் தொடர்ந்த வழக்கை வாபஸ் பெற தயாராக இருக்கிறேன் என்று திமுக வேட்பாளர் டாக்டர் பி.சரவணன் தெரிவித்துள்ளார்.

கடந்த முறை  திருப்பரங்குன்றம் இடைத்தேர்தலில், அதிமுக வேட்பாளர் ஏ.கே.போஸ் வெற்றிப் பெற்றதாக அறிவிக்கப்பட்டது.
இதனை எதிர்த்து திமுக வேட்பாளர் டாக்டர் பி.சரவணன், உயர்நீதிமன்றத்தில் மனு தாக்கல் செய்தார்.அந்த மனுவில், தேர்தல் நடந்த நேரத்தில் உடல் நலக்குறைவால் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டிருந்த ஜெயலலிதா, அதிமுக வேட்பாளராக ஏ.கே.போஸை அங்கீகரித்து வேட்பு மனுவில், இடதுகை பெருவிரல் ரேகையை பதிவுச் செய்து, தேர்தல் அதிகாரியிடம் ஒப்படைக்கப்பட்டுள்ளதாக தெரிவித்தார்.

இந்தியாவில் 7 கட்டமாக மக்களவை தேர்தல் நடைபெற உள்ளது.அதில் தமிழகத்தில் தேர்தல் ஏப்ரல் 18-ஆம் தேதி நடைபெற உள்ளது. இதற்கான வேட்புமனு தாக்கல் மார்ச் 19-ஆம் தேதி தொடங்கி மார்ச் 26-ஆம் தேதி முடிவடைகிறது. மார்ச் 27-ஆம் தேதி வேட்புமனு பரிசீலனை செய்யப்படும் இதற்கான தேர்தல் முடிவுகள் மே 23-ஆம் தேதி அறிவிக்கப்படும் என்று தெரிவிக்கப்பட்டது.

 

அதேபோல் காலியாக உள்ள 21 சட்டமன்றத் தொகுதிகளில் 18 தொகுதிகளுக்கு இடைத்தேர்தல் நடைபெறும் என்று தெரிவிக்கப்பட்டது.மீதிவுள்ள 3 தொகுதிகளில்  வழக்குகள் நிலுவையில் உள்ளதால் இந்த தொகுதிகளுக்கு தேர்தல் அறிவிக்கப்படவில்லை என தேர்தல் ஆணையம் தெரிவித்துள்ளது.

இந்நிலையில்  திருப்பரங்குன்றம் தொகுதியில் கடந்த முறை போட்டியிட்டு தோல்வியடைந்த திமுக வேட்பாளர் சரவணன் என்பவர், தேர்தல் ஆணையத்திடம் கடிதம் ஒன்றை அளித்திருக்கிறார். அதில் தான் தொடர்ந்த வழக்கை வாபஸ் பெற தயாராக இருக்கிறேன்.தொகுதி மக்களின் நலன் கருதி இடைத் தேர்தலை நடத்த வேண்டும் என்றும் தெரிவித்துள்ளார்.இதனால் தேர்தல் ஆணையம் தேர்தலை நடத்துமா என்ற எதிர்பார்ப்பு எழுந்துள்ளது.

Published by
Venu

Recent Posts

அதானி விவகாரம், அமித்ஷா பேச்சு, தற்போது வேறு பிரச்சனை! – ராகுல் காந்தி கடும் குற்றசாட்டு!

அதானி விவகாரம், அமித்ஷா பேச்சு, தற்போது வேறு பிரச்சனை! – ராகுல் காந்தி கடும் குற்றசாட்டு!

டெல்லி : கடந்த 2 நாட்களாக நாடாளுமன்ற வளாகம் மிக பரபரப்பாக இயங்கி வருகிறது. அதிலும் இன்று நாடாளுமன்ற வளாகத்தில்…

4 hours ago

ஆத்தி மரத்தின் அசர வைக்கும் நன்மைகள்..!

ஆத்தி மரத்தின் சிறப்புகளையும் அதன் ஆரோக்கிய நன்மைகளையும் இந்த செய்தி குறிப்பில் பார்க்கலாம். சென்னை : ஆத்தி மரத்தை இடிதாங்கி…

6 hours ago

விடுதலை-2வில் 8 நிமிட காட்சிகள் நீக்கம்! ‘ஷாக்’ கொடுத்த வெற்றிமாறன்!

சென்னை : நாளை (டிசம்பர் 20) வெற்றிமாறன் இயக்கத்தில், விஜய் சேதுபதி, சூரி நடித்துள்ள விடுதலை படத்தின் 2ஆம் பாகம்…

6 hours ago

கலகலப்பு பட காமெடி நடிகர் கோதண்டராமன் காலமானார்!

சென்னை : காலகலப்பு திரைப்படத்தில் நடித்ததன் மூலம் பிரபலமானவர் நடிகர் நடிகர் கோதண்டராமன். இவர் கடந்த சில நாட்களாகவே உடல் நிலை…

8 hours ago

மல்லிகார்ஜுன கார்கே மீது தாக்குதல்? சபாநாயகரிடம் காங்கிரஸ் பரபரப்பு புகார்!

டெல்லி : இன்று நாடாளுமன்ற வளாகமே பரபரப்புக்கு பஞ்சமில்லாமல் இயங்கி வருகிறது. ஒருபக்கம், அம்பேத்கரை அமித்ஷா அவமதித்துவிட்டார் என காங்கிரஸ்…

8 hours ago

ஆருத்ரா தரிசனம் என்றால் என்ன?. எப்போது வருகிறது தெரியுமா?

ஆருத்ரா தரிசனம் என்றால் என்ன அதன் பலன்கள் மற்றும் சிறப்புகளை இந்த செய்து குறிப்பில் காணலாம் . சென்னை :சிவபெருமானுக்கு…

9 hours ago