என் மீதுள்ள வழக்கை எதிர்க்கொள்ள நான் தயாராக உள்ளேன் – அமைச்சர் செந்தில் பாலாஜி

Default Image

என் மீது உள்ள வழக்கை நான் எதிர்கொள்வதற்கு தயாராக உள்ளேன் என அமைச்சர் செந்தில் பாலாஜி  தெரிவித்துள்ளார்.

சென்னை மின்துறை ஆய்வு கூட்டத்தை முடித்த பின்பு அமைச்சர் செந்தில் பாலாஜி அவர்கள் செய்தியாளர்களுக்கு பேட்டியளித்துள்ளார். அப்போது அவரிடம் அதிமுக முன்னாள் அமைச்சர்கள் வீட்டில் சோதனை நடைபெறுவதற்கு நீங்கள் தான் காரணமா என கேள்வி எழுப்பினர்.

அதற்கு பதில் அளித்த அவர், என் மீதும் தான் வழக்கு தொடர்ந்தார்கள். நான் யாரை சொல்வது என கேள்வி எழுப்பினர். என் மீது தவறு இருந்தால் நான் தான் நிரூபிக்க வேண்டும். எந்த தவறும் இல்லை எனில் தைரியமாக எதிர்கொள்ளலாம். ஆனால் தேவையற்ற கருத்துக்களை ஏன் சொல்ல வேண்டும் என தெரிவித்தார்.

என் மீது உள்ள வழக்கை நான் எதிர்கொள்வதற்கு தயாராக உள்ளேன். என் மீதான வழக்கை சரியாக விசாரிக்க இல்லை என்று உச்சநீதிமன்றம் தெரிவித்துள்ளது. அப்போது விசாரித்தது சரியில்லை என்றும், அதைப் பற்றி சொன்னால் சில கசப்புகள் வெளிவந்து விடும் என்றும், அவர்கள் மீதான வழக்கை அவர்கள்  எதிர்கொள்ளட்டும். யார் தவறு செய்தாலும் தண்டனை கிடைப்பது உறுதி என்றும் அவர் தெரிவித்துள்ளார்.

Follow us

Whatsapp Google News Youtube Facebook Facebook X (formerly Twitter) Twitter Instagram Instagram

Leave a Reply

லேட்டஸ்ட் செய்திகள்

live news tamil
Congress Leader Selvaperunthagai say about TVK Vijay
Heart Donation
gold price
KL Rahul - Virat Kohli
TikTok Ban in USA
Coimbatore Tidel Park