‘பாஜக தலைவராக நான் ரெடி ..!ஆனா தினமும் தமிழிசை வீட்டு முன் நிற்க முடியாது ..!எஸ்.வி.சேகர் அதிரடி

Published by
Venu

தமிழக பாஜக தலைமை ஏற்க தயாராக உள்ளதாக எஸ்.வி.சேகர் தெரிவித்துள்ளார்.

எஸ்.வி.சேகர் பாரதிய ஜனதா கட்சி பிரமுகர், காமெடி நடிகர் ஆவார்.இந்நிலையில் எஸ்.வி.சேகர் தனது முகநூல் பக்கத்தில் பெண் பத்திரிகையாளர்கள் குறித்த அவதூறான கருத்தைப் பகிர்ந்திருந்தார். இதையடுத்து, எஸ்.வி.சேகர் மீது பல இடங்களில் அவதூறு வழக்கு தொடரபட்டது.வழக்குகளும் நடைபெற்று வருகிறது.

Image result for SV SEKAR BJP LEADER  TAMILISAI

இந்நிலையில் தற்போது ஸ்ரீவில்லிபுத்தூரில் எஸ்.வி சேகர் கருத்து ஒன்றை தெரிவித்துள்ளார்.அவர் கூறுகையில், பாஜக சரியான பாதையில் போய் கொண்டிருக்கிறது.2019ல் மீண்டும் பிரதமர் நரேந்திர மோடி ஆட்சிக்கு வருவார். எல்லாவற்றையும் ஒரே போல் பார்க்க கூடாது. என் மீது உள்ள வழக்கை சட்டப்படி எதிர் கொண்டு வெற்றி பெறுவேன்.

தமிழக பாஜக தலைமை ஏற்க வாய்ப்பு கிடைத்தால் கண்டிப்பாக நான் ஏற்றுக்கொண்டு தற்போது உள்ள சதவீதத்தை விட அதிகமான சதவீதம் ஓட்டு வாங்கி காட்ட முடியும் என்று அதிரடியாக தெரிவித்துள்ளார்.ஆனால் அவரிடம் செய்தியாளர்கள் கேட்ட கேள்வி பாஜக தலைமையை நீங்கள் ஏற்கவில்லை என்ற கருத்து உள்ளதால் செயற்குழுவுக்கு உங்களை அழைக்கவில்லை என்கிறார்களே என்ற கேள்வி ஆகும்.பின்னர் அவர் தனது பதிலை மாற்றி கூறினார்.மேலும்  நம்மை அழைத்தால் தான் போக முடியும்.அதற்காக தினமும் தமிழிசை வீட்டு முன் நின்று அக்கா நான் வந்துட்டேன்னு சொல்லணுமா?அவரை என்னைவிட வயதில் சிறியவர்   என்றும் தெரிவித்துள்ளார்.

தற்போது தமிழக பாஜக தலைவராக தமிழிசை உள்ளார் என்பது குறிப்பிடத்தக்கது. இவர் 2014 ஆகஸ்ட் முதல் இருந்து வருகிறார்.

Published by
Venu

Recent Posts

என்கவுண்டரை பற்றி பேசும் “வேட்டையன்”! மிரட்டலாக வெளியான ப்ரவ்யூ!

சென்னை : டி.ஜி.ஞானவேல் இயக்கத்தில் ரஜினிகாந்த் நடித்து திரைக்குவர இருக்கும் வேட்டையன் திரைப்படத்தின் டீசர் (Prevue) தற்போது யூட்யூபில் வெளியாகி…

5 hours ago

ரீல்ஸ் செய்த வார்னருக்கு அடித்த ஜாக்பாட்.! புஷ்பா-னா சும்மாவா!!!

சென்னை : இயக்குநர் சுகுமார் இயக்கத்தில், மைத்ரி மூவி மேக்கர்ஸ் தயாரிப்பில்  உருவான 'புஷ்பா' முதல் படத்தின் மாபெரும் வெற்றியைத்…

6 hours ago

வட இந்தியாவில் வசூல் வேட்டை செய்யும் GOAT! 14 நாட்களில் எத்தனை கோடிகள் தெரியுமா?

சென்னை :  GOAT படம் பெரிய எதிர்பார்ப்புகளுக்கு மத்தியில் கடந்த செப்டம்பர் 05-ஆம் தேதி திரையரங்குகளில் வெளியானது. படம் மக்களுக்கு…

6 hours ago

திருப்பதி லட்டு தோன்றிய வரலாறு தெரியுமா ?

சென்னை -திருப்பதி ஏழுமலையான் கோவிலில் லட்டு பிரசாதமாக வழங்கப்படுவது மூன்று  நூற்றாண்டுகளையும் கடந்து தொடர்கிறது. கற்கண்டு சுவையோடு நெய் வாசம்…

7 hours ago

INDvsBAN : பும்ரா வேகத்தில் சுருண்ட வங்கதேசம்! 2-ஆம் நாளிலும் முன்னிலை பெற்று வரும் இந்தியா அணி!

சென்னை : நடைபெற்று வரும் முதல் டெஸ்ட் போட்டியின் இரண்டாம் நாள் ஆட்டமானது இன்று தொடங்கியது. நேற்று சிறப்பாக விளையாடி சதம்…

7 hours ago

பழனி பஞ்சாமிர்தத்தில் விலங்கின் கொழுப்பா.? விளக்கம் அளித்த அறநிலையத்துறை.!

சென்னை : திருப்பதி ஏழுமலையான் கோயிலில் பிரசாதமாக வழங்கப்படும் லட்டில் , மீன் எண்ணெய், விலங்கின் கொழுப்பு ஆகியவை கலந்துள்ளதாக…

7 hours ago