நேற்று இந்திய அளவில் வெளியாகிய சிவில் சர்வீஸ் தேர்வு முடிவில் 559 ஆவது இடம் பிடித்து தேர்வில் அசத்தி இருக்கிறார் அபிநயா எனும் விவசாய குடும்பத்தை சேர்ந்த கரூர் மாணவி.
நேற்று இந்திய அளவில் வெளியாகிய சிவில் சர்வீஸ் தேர்வில் 559 ஆவது இடம் பிடித்து அசத்தியிருக்கிறார் அபிநயா. கரூர் மாவட்டத்தில் பரமத்தி எனும் முன்னூர் ஊராட்சியை சேர்ந்தவர் தான் அபிநயா. இவரது தந்தை ஒரு விவசாயி. ஐ.ஏ.எஸ் ஆக வேண்டும் என்பதற்காக பல முறை சிவில் தேர்வுகள் எழுதி இருந்தாலும் நான்கு முறை தோல்வி அடைந்து ஐந்தாவது முறையாக தற்போது வெற்றி கண்டிருக்கிறார்.
இவர் ஏற்கனவே ராமநாதபுரம் மாவட்டத்தில் உள்ள பரமக்குடி பிளாக்கின் வேளாண்மை அலுவலராக பணியாற்றி வருகிறார். இதுகுறித்து அவர் கூறுகையில், எனது அப்பா ஒரு விவசாயி எனது அம்மா வீடு வேலைகளை பார்த்துக் கொள்கிறார். அண்ணன் விவசாயம் தான். தனியார் பள்ளியில் 11 , 12 படித்து முடித்தேன். தேர்வுக்கு கடந்த 5 வருடங்களாக முயற்சி செய்து கொண்டு வந்தேன். நான்கு முறை தோல்வி தான் கிடைத்தது இருந்தாலும், மனம் தளராமல் போராடினேன் இந்த முறை எனக்கு வெற்றி கிடைத்திருக்கிறது.
எனது முந்தைய நான்கு தோல்விகளுக்கும் என்னுடைய குடும்பத்தினர் நீ கண்டிப்பாக ஐஏஎஸ் ஆக வேண்டும் என்று தொடர்ந்து உற்சாகப்படுத்தி என்னை வெற்றியடைய செய்துள்ளனர், அவர்களுக்கு எனது வெற்றியை சமர்ப்பிக்கிறேன். தொடர்ச்சியான ஆர்வமும் விடாமுயற்சியும் இருந்தால் கடைக்கோடி கிராமத்தில் இருக்கும் இளைஞன் கூட i.a.s. தேர்வில் வெல்லலாம் என அபிநயா கூறியுள்ளார்.
மேலும் ஐஏஎஸ் என்பது ஏதோ வானத்தில் இருக்கும் நட்சத்திரம் அல்ல, அது போல விவசாயத்தை உயிர் மூச்சாகவும் கருத வேண்டும் எந்த உயரத்துக்கு போனாலும் விவசாயத்தை மறக்கக் கூடாது என எனது அப்பா அடிக்கடி சொல்வார். இப்போது நான் வேளாண்துறை அதிகாரிகள் தான் இருக்கிறேன், அதேபோல் சிவில் சர்வீஸ் பணி மூலம் விவசாயிகளையும், விவசாயத்தையும், மேம்படுத்த முயற்சிப்பேன் விவசாயிகளுக்கு பாதுகாவலனாக இருப்பேன் என அபிநயா கூறியுள்ளார்.
தெலங்காணா: 'புஷ்பா 2' திரைப்படத்தின் சிறப்பு கட்சியை பார்க்க ரசிகை ஒருவர் உயிரிழந்த விவகாரத்தில், நடிகர் அல்லு அர்ஜுன் மீது,…
டெல்லி: யூடியூப் உலகின் பல்வேறு மக்களுக்கு பணம் சம்பாதிப்பதற்கு மட்டும் இல்லாமல், மக்களுக்கு தேவையான வீடியோக்களை பார்ப்பதற்கும் ஒரு சமூக…
சென்னை: சென்னை அண்ணா அறிவாலயத்தில் முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் தலைமையில், திமுக செயற்குழு கூட்டம் நடைபெற்றது. இந்த ஆலோசனை கூட்டத்தில், திமுக…
தை அமாவாசை 2025-ல் வரும் தேதி மற்றும் அதன் சிறப்புகளை இந்த செய்தி குறிப்பில் காணலாம். சென்னை :அமாவாசை என்றாலே…
ஜெய்சால்மர் : ராஜஸ்தான் மாநிலம் ஜெய்சல்மேரில், நிதியமைச்சர் நிர்மலா சீதாராமன் தலைமையில் நேற்று நடைபெற்ற 55-வது ஜி.எஸ்.டி கவுன்சில் கூட்டத்தில்,…
சென்னை: தமிழகம் முழுவதும் நீதிமன்றங்களில் துப்பாக்கி ஏந்திய போலீசார் பாதுகாப்பு பணியில் ஈடுபட DGP சங்கர் ஜிவால் உத்தரவிட்டுள்ளார். திருநெல்வேலி…