விவசாயி மகளாக ஐ.ஏ.எஸ் சிவில் தேர்வில் வெற்றி பெற்றதில் பெருமையடைகிறேன் – கரூர் அபிநயா!

Default Image

நேற்று இந்திய அளவில் வெளியாகிய சிவில் சர்வீஸ் தேர்வு முடிவில் 559 ஆவது இடம் பிடித்து தேர்வில் அசத்தி இருக்கிறார் அபிநயா எனும் விவசாய குடும்பத்தை சேர்ந்த கரூர் மாணவி.

நேற்று இந்திய அளவில் வெளியாகிய சிவில் சர்வீஸ் தேர்வில் 559 ஆவது இடம் பிடித்து அசத்தியிருக்கிறார் அபிநயா. கரூர் மாவட்டத்தில் பரமத்தி எனும் முன்னூர் ஊராட்சியை சேர்ந்தவர் தான் அபிநயா. இவரது தந்தை ஒரு விவசாயி. ஐ.ஏ.எஸ் ஆக வேண்டும் என்பதற்காக பல முறை சிவில் தேர்வுகள் எழுதி இருந்தாலும் நான்கு முறை தோல்வி அடைந்து ஐந்தாவது முறையாக தற்போது வெற்றி கண்டிருக்கிறார்.

இவர் ஏற்கனவே ராமநாதபுரம் மாவட்டத்தில் உள்ள பரமக்குடி பிளாக்கின் வேளாண்மை அலுவலராக பணியாற்றி வருகிறார். இதுகுறித்து அவர் கூறுகையில், எனது அப்பா ஒரு விவசாயி எனது அம்மா வீடு வேலைகளை பார்த்துக் கொள்கிறார். அண்ணன் விவசாயம் தான். தனியார் பள்ளியில் 11 , 12 படித்து முடித்தேன். தேர்வுக்கு கடந்த 5 வருடங்களாக முயற்சி செய்து கொண்டு வந்தேன். நான்கு முறை  தோல்வி தான் கிடைத்தது இருந்தாலும், மனம் தளராமல் போராடினேன் இந்த முறை எனக்கு வெற்றி கிடைத்திருக்கிறது.

எனது முந்தைய நான்கு தோல்விகளுக்கும் என்னுடைய குடும்பத்தினர் நீ கண்டிப்பாக ஐஏஎஸ் ஆக வேண்டும் என்று தொடர்ந்து உற்சாகப்படுத்தி என்னை வெற்றியடைய செய்துள்ளனர், அவர்களுக்கு எனது வெற்றியை சமர்ப்பிக்கிறேன். தொடர்ச்சியான ஆர்வமும் விடாமுயற்சியும் இருந்தால் கடைக்கோடி கிராமத்தில் இருக்கும் இளைஞன் கூட i.a.s. தேர்வில் வெல்லலாம் என அபிநயா கூறியுள்ளார்.

மேலும் ஐஏஎஸ் என்பது ஏதோ வானத்தில் இருக்கும் நட்சத்திரம் அல்ல, அது போல விவசாயத்தை உயிர் மூச்சாகவும் கருத வேண்டும் எந்த உயரத்துக்கு போனாலும் விவசாயத்தை மறக்கக் கூடாது என எனது அப்பா அடிக்கடி சொல்வார். இப்போது நான் வேளாண்துறை அதிகாரிகள் தான் இருக்கிறேன், அதேபோல் சிவில் சர்வீஸ் பணி மூலம் விவசாயிகளையும், விவசாயத்தையும், மேம்படுத்த முயற்சிப்பேன் விவசாயிகளுக்கு பாதுகாவலனாக இருப்பேன் என அபிநயா கூறியுள்ளார்.

Follow us

Whatsapp Google News Youtube Facebook Facebook X (formerly Twitter) Twitter Instagram Instagram

லேட்டஸ்ட் செய்திகள்