நான் பேசிய அனைத்து விவரங்களுக்கும் ஆதாரம் உள்ளது என்று தமிழக பாஜக தலைவர் அண்ணாமலை பேட்டி.
சென்னை கமலாயத்தில் செய்தியாளர்களிடம் பேசிய பாஜக மாநில தலைவர் அண்ணாமலை, திமுக அனுப்பியுள்ள நோட்டீசை சட்டப்படி சந்திப்பேன். நான் பேசிய அனைத்து விவரங்களுக்கும் ஆதாரம் உள்ளது. திமுக அவதூறு வழக்கு போடும் அளவிற்கு நான் தகுதி இல்லாத சாதாரண விவசாயி தான். 610 கோடி ரூபாய்க்கு நான் வொர்த் இல்லை, என்கிட்ட 2 டப்பா, ஊரில் 2 ஆடு, மாடுகள் தான் இருக்கிறது.
என்னை சாதாரண மனிதாக மதித்து, 500 கோடி முதலில், 100 கோடி 2வது மற்றும் தற்போது 10 கோடி நஷ்டஈடு கேட்டு திமுக எம்பி வில்சன் புதிய நோட்டீஸ் அனுப்பியுள்ளார் என அண்ணாமலை கூறினார். எனவே, எல்லாத்தையும் அனுப்புங்கள், மொத்தமாக பார்த்துவிடலாம். ஒருவாரம் டைம் எடுத்து மொத்தமாக அனுப்பி வையுங்கள் என தெரிவித்தார்.
இதனைத்தொடர்ந்து பேசிய அவர், அதிமுக அமைச்சர்களை நான் மிரட்டி பணம் வாங்கியுள்ளேன் என பத்திரிகையாளர் சந்திப்பில் திமுக அமைப்பு செயலாளர் ஆர்எஸ் பாரதி குற்றசாட்டி உள்ளனர். நான் இன்னும் 6 மணி நேரம் பாஜக தலைமை அலுவலகத்தில் இருப்பேன், தெம்பு, திராணி இருந்தால், உண்மையான ஆதாரம் இருக்கு என்றால் முழு போலீஸ் படையை பயன்படுத்தி என்னை கைது செய்து உள்ளே அனுப்ப வேண்டும்.
அப்படி கைது செய்யவில்லை என்றால், திமுக சொல்வதை இனிமேல் தமிழக மக்கள் பொருட்டாக எடுத்துக்கொள்ளமாட்டார்கள் என்றார். என்னை கைது செய்யவில்லை என்றால் என் மீதான குற்றசாட்டு பொய்யாகும் என தெரிவித்த அண்ணாமலை, முதலமைச்சரின் துபாய் பயணம் குறித்து பல கேள்விகள் உள்ளன. அதற்கு பதிலளிக்க வேண்டிய கடமை அரசுக்கு உள்ளது என்றும் தெரிவித்தார் என்பது குறிப்பிடத்தக்கது.
சென்னை : வங்கக்கடலில் உருவான புதிய காற்றழுத்த தாழ்வு பகுதியின் காரணமாக தமிழ்நாட்டில் பல்வேறு இடங்களில் மிதமானது முதல் கனமழை…
டெல்லி : ஜார்கண்ட் மாநில சட்டப்பேரவை தேர்தல் முதற்கட்ட வாக்குப்பதிவு தற்போது தொடங்கியுள்ளது. அங்கு மொத்தமுள்ள 81 தொகுதிகளில் 15…
சென்னை : தமிழகத்தில் வடகிழக்கு பருவமழை தொடங்கி ஆங்காங்கே மழை பெய்து வருகிறது. அதேநேரம், வங்கக்கடலில் உருவான புதிய காற்றழுத்த…
சென்னை : தமிழகத்தில் வடகிழக்கு பருவமழை தொடங்கி ஆங்காங்கே பெய்து வருகிறது. அதேநேரம், வங்கக்கடலில் உருவான புதிய காற்றழுத்த தாழ்வு…
சீனா : ஜுஹாய் நகரில் உள்ள விளையாட்டு மையத்தில் தினமும் பலர் உடற்பயிற்சி செய்து வருவது வழக்கம். அப்படி தான்…
சென்னை : வங்கக்கடலில் உருவான காற்றழுத்த தாழ்வு பகுதி காரணமாக தமிழகத்தில் சில மாவட்டங்களில் மழைக்கு வாய்ப்பு இருப்பதாக ஏற்கனவே, வானிலை…