அனைவரும் என்னை முதலமைச்சர் என்கிறார்கள், ஆனால், நான் உங்களைதான் முதலமைச்சராகப் பார்க்கிறேன் என்று முதலமைச்சர் பழனிசாமி தெரிவித்துள்ளார்.
2021 ஆம் ஆண்டுக்கான சட்டமன்ற தேர்தல் வெகு விரைவில் நெருங்கிவரும் நிலையில், தற்போது அரசியல் கட்சிகள் தங்களுக்கான தேர்தல் பிரச்சாரத்தை ஆரம்பித்து விட்டன.அந்த வகையில் சட்டமன்ற தேர்தல் குறித்து வெற்றிநடை போடும் தமிழகம்’ என்ற பெயரில் இன்று நாமக்கல் மாவட்டத்தில் முதலமைச்சர் பழனிசாமி தேர்தல் பரப்புரை தொடங்கியுள்ளார்.
நாமக்கல் மாவட்டம் ,பாப்பி நாயக்கன்பட்டி பகுதியில் முதலமைச்சர் பழனிசாமி பேசுகையில், ஏழை மக்களுக்காவே 2000 மினி கிளினிக் திட்டம் தொடங்கப்பட்டுள்ளது.அனைவரும் என்னை முதலமைச்சர் என்கிறார்கள். ஆனால், நான் உங்களைதான் முதலமைச்சராகப் பார்க்கிறேன். என்னைப் பொருத்தவரை மக்கள் தான் முதலமைச்சர். இது நீங்கள் கொடுத்த பதவி.முதலமைச்சர் நாற்காலி மேல் ஆசைப்படுபவன் நான் அல்ல. உழைப்பால் உயர்வடைய வேண்டும் என்று எண்ணுகின்றவன். நாமக்கல் மாவட்டத்தில் மருத்துவக்கல்லூரி மருத்துவமனை கட்டப்பட்டு வருகிறது. சென்னை அப்போலோவில் கிடைக்கும் அதே சிகிச்சை, நாமக்கல் மக்களுக்கும் கிடைக்கும் என்று முதலமைச்சர் பழனிசாமி தெரிவித்துள்ளார்.
உடலில் ரத்த சிவப்பு செல்களின் அளவை அதிகரிக்க சாப்பிட வேண்டிய உணவுகள் மற்றும் தவிர்க்க வேண்டிய உணவுகளை இந்த செய்தி…
சென்னை : அமெரிக்காவில் உள்ள கலிபோர்னியா மாகாணத்தில் கடந்த நவம்பர் 10 முதல் 17ஆம் தேதி வரையில், 6வது உலக…
டெல்லி: அமித் ஷா பேசியதற்கு நாடாளுமன்றத்தில் எதிர்ப்பு எழுந்த நிலையில், அம்பேத்கரை மத்திய அரசு முழுமையாக மதிக்கிறது என்று கூறி,…
சென்னை: மாநிலங்களவையில் அம்பேத்கர் குறித்து உள்துறை அமைச்சர் அமித் ஷா பேசியது சர்ச்சையை ஏற்படுத்தியுள்ளது. நேற்றைய தினம் நடந்த நாடாளுமன்றத்தில்…
டெல்லி: அம்பேத்கர் பெயர் இப்போது ஒரு பேஷன் ஆகிவிட்டது. அவர் பெயருக்கு பதில் கடவுளின் பெயரை சொல்லி இருந்தால் ஏழு…
சென்னை : இந்திய கிரிக்கெட் அணியின் சுழற்பந்துவீச்சாளர் ரவிசந்திரன் அஸ்வின் சர்வதேச கிரிக்கெட் போட்டிகளில் இருந்து தான் ஓய்வு பெறுவதாக…