வெல்ல போவது நானல்ல…! கமலஹாசன் ட்வீட்…!
மண், மொழி, மக்கள் காக்கும் போரில் கோவை தெற்கு தொகுதியில் களம் காண்கிறேன். வெல்லப் போவது நானல்ல. தமிழகம்.
தமிழகத்தில் ஏப்.6ம் தேதி சட்டமன்ற தேர்தல் நடைபெறவுள்ள நிலையில், அனைத்து அரசியல் கட்சிகளும் தேர்தல் பணிகளில் தீவிரமாக ஈடுபட்டு வருகிறது. இந்நிலையில், இன்று முதல் வேட்புமனு தாக்கல் செய்யப்பட்டு வருவதை தொடர்ந்து, அனைத்து கட்சிகளும் வேட்பாளர் பட்டியல், மற்றும் தொகுதி பங்கீடு விவரங்களை வெளியிடப்பட்டு வருகிறது.
இந்நிலையில், மக்கள் நீதி மய்யம் கட்சி தலைவர் கமலஹாசன் கோவை தெற்கு தொகுதியில் போட்டியிடுகிறார். இதனையடுத்து, கமலஹாசன் தனது ட்வீட்டர் பக்கத்தில், ‘மண், மொழி, மக்கள் காக்கும் போரில் கோவை தெற்கு தொகுதியில் களம் காண்கிறேன். வெல்லப் போவது நானல்ல. தமிழகம்.’ என்று பதிவிட்டுள்ளார்.
மண், மொழி, மக்கள் காக்கும் போரில் கோவை தெற்கு தொகுதியில் களம் காண்கிறேன். வெல்லப் போவது நானல்ல. தமிழகம்.
— Kamal Haasan (@ikamalhaasan) March 12, 2021