காங்கிரஸ் கட்சி தயவில் நான் எம்.பி யாக தேர்வாகவில்லை – வைகோ காட்டமாக பதில்!
காங்கிரஸ் கட்சி தயவில் என்றைக்கும் எம்.பி யாக தேர்வு செய்யப்படவில்லை என்று மதிமுக பொது செயலாளர் வைகோ அவர்கள் காங்கிரஸ் தமிழக தலைவர் கே.எஸ் அழகிரிக்கு காட்டமாக பதில் அளித்துள்ளார்.
காஷ்மீர் மாநிலத்திற்கு சிறப்பு அந்தஸ்து ரத்து செய்யப்பட்டது தொடர்பாக மாநிலங்களவையில் பேசிய வைகோ காஷ்மீர் விவகாரத்தில் காங்கிரஸ் கட்சி முதல் துரோகம் செய்ததாவும் தற்போது பாஜக இரண்டாவதாக மிகப்பெரிய துரோகம் செய்துவிட்டதாக கூறினார்.
வைகோ அவர்கள் பேசிய பேச்சிற்கு காங்கிரஸ் தமிழ் மாநில தலைவர் கே.எஸ். அழகிரி கடும் கண்டனம் தெரிவித்தார். மேலும், காங்கிரஸ் எம்.எல்.ஏ க்கள் தயவால் தான் நீங்கள் எம்.பி யாக தேர்வுசெய்யப்பட்டு என்றும் கூறினார். இதற்கு பதில் அளித்த வைகோ நான் திமுக சட்டமன்ற உறுப்பினர்களால் மட்டுமே எம்பி யாக தேர்வு செய்யப்பட்டுள்ளேன் என்றும் இலங்கையில் தமிழ் இனத்தையே கொன்று குவித்த காங்கிரஸ் தயவால் என்றைக்கும் தேர்வாகவில்லை என்று கூறி இருக்கிறார்.
மேலு, அற்பபுத்தி உள்ளவர்கள் எழுப்பிய கேவில்களுக்கு பதில் அளிக்க தேவையில்லை என்றும் தெரிவித்துள்ளார்.