தமிழ்நாடு பாஜக தலைவர் அண்ணாமலை `என் மண், என் மக்கள்’ என்னும் பெயரில் பாத யாத்திரைப் பயணம் மேற்கொண்டு வருகிறார். கடந்த ஜூலை 28-ஆம் தேதி முதல் `என் மண், என் மக்கள்’ என்னும் பெயரில் அண்ணாமலை பாத யாத்திரைப் பயணம் மேற்கொண்டு வருகிறார். இந்த நிலையில், புதுக்கோட்டையில் செய்தியாளர்களிடம் பேசிய பாஜக மாநில தலைவர் அண்ணாமலை, அடுத்தாண்டு நடைபெறும் மக்களவை தேர்தலில் நான் போட்டியிடவில்லை.
தமிழ்நாட்டில் ஆட்சி மாற்றத்துக்குதான் பாஜகவில் இணைந்தேன். கட்சி தொண்டனாக தேர்தல் வெற்றிக்கு பாடுபடுவேன். டெல்லிக்கு செல்ல எனக்கு விருப்பமில்லை. தமிழ்நாட்டு மண்ணில் எனது அரசியல் இருக்க வேண்டும் என விரும்புகிறேன் எனவும் தெரிவித்ததாக கூறப்படுகிறது.
மேலும், அண்ணாமலை கூறுகையில், அதிமுகவோடு நாங்கள் கூட்டணி வைத்துள்ளோம், ஓபிஎஸ் உள்ளிட்டோரை நாங்கள் ஒதுக்கவில்லை. அவர் விரக்தியில் இல்லை, முதல்வர் உள்ளிட்ட பல்வேறு பொறுப்புகளை வகித்தவர் ஓ.பன்னீர்செல்வம். அதிமுகவுடன் கூட்டணியில் இருக்கிறோம். கோடநாடு கொலை, கொள்ளை வழக்கில் யார் தவறு செய்திருந்தாலும் அவர்கள் தண்டிக்கப்பட வேண்டும் எனவும் கூறினார்.
ஹைதராபாத் : தெலுங்கு மக்கள் குறித்து அவதூறாகப் பேசிய வழக்கில் தலைமறைவாக இருந்து வந்த நடிகை கஸ்தூரி தற்போது ஹைதராபாத்தில்…
பீகார் : ஹாக்கியில் மகளிருக்கான 8-வது ஆசிய கோப்பைத் தொடரானது தற்போது பீகாரில் உள்ள ராஜ்கிரில் நடைபெற்று வருகிறது. இந்த…
மாஸ்கோ : கடந்த 2022-ம் ஆண்டு பிப்ரவரி 24-ம் தேதி முதல், நோட்டோ அமைப்பு நாடுகளுடன் உக்ரைன் இணையக் கூடாது…
சென்னை : வரும் நவம்பர் 20-ஆம் தேதி நயன்தார-விக்னேஷ் சிவன் இருவரின் திருமண வீடியோ நெட்ஃப்ளிக்ஸ் தளத்தில் வெளியாக இருக்கிறது.…
மும்பை : இந்திய அணி, ஆஸ்திரேலியாவில் சுற்றுப் பயணம் மேற்கொண்டு 5 போட்டிகள் அடங்கிய டெஸ்ட் தொடரில் விளையாடவுள்ளது. இந்த…
சென்னை : தென்மேற்கு வங்கக்கடல் பகுதியில் வளிமண்டல காற்றழுத்த சுழற்சி நிலவி வருகிறது. இதன் காரணமாக தமிழகத்தில் தென்மாவட்டங்களில் ஒரு…