வருமான வரித்துறை சோதனைக்கெல்லாம் அஞ்சமாட்டேன்-கமல்ஹாசன்
நான் முறையாக வரி செலுத்துவதால் வருமான வரித்துறை சோதனைக்கெல்லாம் அஞ்சமாட்டேன் என்று மக்கள் நீதி மய்யம் தலைவர் கமல்ஹாசன் தெரிவித்துள்ளார்.
கமல்ஹாசன் கடந்த ஆண்டு பிப்ரவரி மாதம் 21-ந் தேதி மக்கள் நீதி மய்யம் கட்சியைத் தொடங்கினார். மதுரையில் நடந்த பொதுக்கூட்டத்தில் கட்சியின் பெயர், கொடி ஆகியவற்றை அறிவித்தார்.
இந்தியாவில் 7 கட்டமாக மக்களவை தேர்தல் நடைபெற உள்ளது.தமிழகத்தில் தேர்தல் ஏப்ரல் 18-ஆம் தேதி நடைபெற உள்ளது.மக்களவை தேர்தலில் 40 தொகுதிகளிலும் தனித்துப் போட்டியிடுவோம் என கமல்ஹாசன் அறிவித்துள்ளார்.
அதேபோல் மக்களவை தேர்தலுக்கான மக்கள் நீதி மய்யம் கட்சிக்கு “டார்ச் லைட்” சின்னமாக ஒதுக்கப்பட்டது.மக்களவைத் தேர்தல் தேதி அறிவித்ததை தொடர்ந்து தமிழகத்தில் தி.மு.க மற்றும் அ.தி.மு.க வேட்பாளர்களை அறிவித்தனர்.
பின்னர் 2019 மக்களவை தேர்தல் மற்றும் இடைத்தேர்தலில் மக்கள் நீதி மய்யம் சார்பில் போட்டியிடும் வேட்பாளார்கள் பட்டியலை கமல்ஹாசன் வெளியிட்டார்.
நேற்று திமுக பொருளாளர் துரைமுருகன் வீட்டில் வருமானவரி சோதனை நடத்தப்பட்டது.
இந்நிலையில் மக்கள் நீதி மய்யம் தலைவர் கமல்ஹாசன் கருத்து தெரிவித்துள்ளார்.அவர் கூறுகையில், நான் முறையாக வரி செலுத்துவதால் வருமான வரித்துறை சோதனைக்கெல்லாம் அஞ்சமாட்டேன் என்றும் நான் முறையாக வரி கட்டுகிறேன், நாங்கள் நேர்மையாக இருக்கிறோம் என்பதால் எங்களுக்கு வாக்களியுங்கள் என்று கூறியுள்ளார் .மேலும் மக்கள் நீதி மய்யம் கட்சிக்கு வாக்களித்து புரட்சியை ஏற்படுத்தி மக்களும் புரட்சி திலகம் ஆகலாம் என்று மக்கள் நீதி மய்யம் தலைவர் கமல்ஹாசன் தெரிவித்துள்ளார்.