அரவக்குறிச்சி தொகுதியில் பிரச்சாரம் மேற்க்கொண்ட கமல் சுதந்திர இந்தியாவின் முதல் தீவிரவாதி நாதுராம் கோட்ஸே என்று கூறினார் .இது பலத்த சர்ச்சையை கிளப்பியதோடு பல எதிர்ப்புகளும் ஆதரவும் கிளம்பியது.
இதனிடையே நேற்று அரவக்குறிச்சி தொகுதியில் அவர் பேசிவிட்டு கீழிறங்கும் போது காலணி வீசப்பட்டது.இந்த சம்பவம் தொடர்பாக பாஜகாவை சார்ந்த சிலர் கைது செய்யப்பட்டனர்.இந்நிலையில் இன்று சென்னை விமான நிலையத்தில் செய்தியாளர்களை சந்தித்த கமல், தனது நிலைப்பாட்டில் இருந்து மாறாமல் நான் சொன்னதில் எந்த தவறும் இல்லை என்றும் ,இதை நான் ஏற்கனவே மெரினாவில் பேசியுள்ளேன்.இது உருவான சர்ச்சையில்லை உருவாக்கப்பட்ட சர்ச்சை,பிரதமர் மோடிக்கு பதில் கூறவேண்டியதில்லை .சரித்திரம் பதில் சொல்லும்.நான் கைதுக்கு பயப்படவில்லை, கைது செய்தால் பதற்றம் அதிகரிக்கும். அது என்னுடைய வேண்டுகோள் இல்லை அது என்னுடைய அறிவுரை என்று தெரிவித்தார்.
மேலும் நாதுராம் கோட்ஸே குறித்த கருத்து தொடர்பாக சூலூரில் இன்று கமல் பிரச்சாரம் மேற்க்கொள்ள தடை விதிக்கப்பட்டுள்ளது .இதற்கு பதிலளித்த கமல் பரப்புரை மேற்க்கொள்ள தடைவிதிக்கப்பட்டுள்ளதில் அரசியல் உள்ளது. அப்படி பதற்றமான சூழல் இருந்தால் சூலூரில் ஏன் தேர்தலை தள்ளிவைக்க கூடாது என கேள்வி எழுப்பியுள்ளார்.
நெல்லை : தீபாவளி பண்டிகையை முன்னிட்டு வெளியான அமரன் திரைப்படம் வெளியாகி 3-வது வாரமாக பல திரையரங்குகளில் ஓடிக்கொண்டு இருக்கிறது. படத்திற்கு…
சென்னை : இன்று கார்த்திகை மாதம் முதல் தேதியை முன்னிட்டு சபரிமலை ஐயப்ப பக்தர்கள் மாலை அணிந்து தங்கள் விரத…
சென்னை : இளம் தமிழ் இயக்குனர் சுரேஷ் சங்கையா காலமானார். உடல் நலம் பிரச்சனையால் அவதிப்பட்டு வந்த அவர், நேற்று (வெள்ளிக்கிழமை)…
சென்னை : தமிழகம் முழுவதும் இன்று வாக்காளர் பட்டியல் திருத்துவதற்கு சிறப்பு முகாம் நடைபெறுகிறது. நாளை ஞாயிற்றுக்கிழமையும் முகாம் நடைபெறவுள்ளது.…
சென்னை : மன்னார் வளைகுடா மற்றும் அதனை ஒட்டிய இலங்கை கடலோரப்பகுதிகளின் மேல் ஒரு வளிமண்டல கீழடுக்கு சுழற்சி நிலவுகிறது.…
சென்னை : கேரள மாநிலத்தில் மிகவும் பிரசித்திபெற்ற சபரிமலையில் உள்ள ஐயப்பனுக்கு உகந்த கார்த்திகை மாதம் இன்று (16.11.2024) முதல்…