அண்ணாமலை பார்த்து நான் பயப்படவில்லை..! ஜெயக்குமார் பேச்சு..!
சென்னையில் அண்ணாமலையை பார்த்து நான் பயப்படவில்லை என அதிமுக முன்னாள் அமைச்சர் ஜெயக்குமார் பேட்டி.
சென்னையில் உள்ள கமலாலயத்தில் நேற்று காலை தமிழக பாஜக தலைவர் அண்ணாமலை திமுகவினர் சொத்து பட்டியலை வெளியிட்டார். இது அரசியல் வட்டாரத்தில் சலசலப்பை ஏற்படுத்தி வரும் நிலையில், அண்ணாமலை திமுக ஊழல் பட்டியலை வெளியிட்டது நல்ல விஷயம் என்று திமுகவினர் குறித்து அண்ணாமலை வெளியிட்ட விவரங்கள் குறித்து அதிமுக முன்னாள் அமைச்சர் ஜெயக்குமார் சென்னை ராயபுரத்தில் பேட்டியளித்து வருகிறார்.
அதில், தற்பொழுது அண்ணாமலை திமுக பற்றி மட்டுமே கூறியிருக்கிறார், அவர் அதிமுக சொத்துப்பட்டியல் என்று முன்னாள் அமைச்சர்கள் அல்லது அதிமுக சார்ந்தவர்களின் சொத்துப்படியலோ வெளியிட்டாள் அனைத்தையும் சந்திக்க தயாராக இருப்பதாகவும், எதை கண்டும் பயப்பட மாட்டேன் என்றும் கூறினார். மேலும், மடியில் கனம் இருந்தால் தான் வழியில் பயம் இருக்கும் எங்களுக்கு மடியில் கனமில்லை அதனால் வழியில் பயமில்லை என்று கூறினார்.