நான் விளம்பரம் செய்யவில்லை, ஸ்டாலின் தான் விளம்பரம் செய்கிறார் – குற்றச்சாட்டுக்கு விளக்கம் கூறிய முதல்வர்.!

Default Image

நான் விளம்பரம் செய்யவில்லை, ஸ்டாலின் தான் விளம்பரம் செய்கிறார் என ஸ்டாலின் குற்றச்சாட்டிற்கு முதல்வர் பதில் அளித்துள்ளார். 

முதல்வர் பழனிசாமி இன்று சென்னை மாநகராட்சி அலுவலகத்தில் ஆலோசனை மேற்கொண்ட பிறகு செய்தியாளர்களை சந்தித்து பேசினார். அப்போது, சென்னை, திருவள்ளூர், செங்கல்பட்டு, காஞ்சிபுரம் ஆகிய 4 மாவட்டங்களை தவிர்த்து, பிற இடங்களில் கொரோனா கட்டுக்குள் உள்ளது என்றும் வைரஸ் பரவலை தடுக்க அரசு பல்வேறு நடவடிக்கைகளை எடுத்து வருகிறது எனவும் தெரிவித்துள்ளார். மேலும் பொது விநியோக திட்டத்தில் பொருட்கள் தடையின்றி வழங்கப்படுகின்றதாக கூறியுள்ளார். 

இதையயடுத்து, மக்கள் நெருக்கம் காரணமாக சென்னையில் பாதிப்பு அதிகமாக உள்ளது. சென்னை மக்களில் கோரிக்கையை ஏற்று பல்வேறு தளர்வுகள் அளிக்கப்பட்டுள்ளன. இந்தியாவிலேயே அதிக வென்டிலேட்டர் உள்ள மாநிலம் தமிழ்நாடு தான் என்றும் கூறியுள்ளார். தமிழகத்தில் 3 ஆயிரத்து 371 வென்டிலேட்டர்கள் உள்ளன. 4,51,800 பிசிஆர் கருவிகள் கையிருப்பில் உள்ளது. தமிழகத்தில் வெண்டிலேட்டர்களின் தேவை குறைவாகவே உள்ளது. மக்கள் அதிகளவில் பாதிக்கப்பட கூடாது என்பதற்காக தான், அதிகளவில் சோதனை செய்து வருகிறோம் என அவர் கூறியுள்ளார்.

இதனிடையே, ஸ்டாலின் குற்றசாட்டுபடி, தமிழகத்தில் 9 லட்சத்தி 14 ஆயிரம் பிசிஆர் கிட் இருப்பதாகவும், அதில், 4.66 லட்சம் பரிசோதனை செய்யப்பட்டுள்ளதாகவும், மீதம் 4.47 லட்சம் கருவி இருக்க வேண்டும் என்று கூறியுள்ளார். ஆனால், முதல்வர் அவர்கள் 1.76 லட்சம் தான் கையிருப்பில் உள்ளது என்று தெரிவித்திருக்கிறார் என்று முதல்வர் தெரிவித்துள்ளார். இதுவரை தமிழகத்தில் 11.5 லட்சம் பிசிஆர் கருவிகள் வாங்கப்பட்டுள்ளன. 2.71 லட்சம் பிசிஆர் கருவிகள் 43 பரிசோதனை மையங்களுக்கு அனுப்பிவைக்கப்பட்டுள்ளன. இதில் முறைகேடு எதுவும் நடைபெறவில்லை நான் விளம்பரம் செய்யவில்லை, ஸ்டாலின் தான் விளம்பரம் செய்கிறார் என ஸ்டாலின் குற்றச்சாட்டிற்கு முதல்வர் பதில் அளித்துள்ளார். 

மேலும், தமிழகத்தில் இதுவரை 15 லட்சத்தி 45 ஆயிரத்து 700 பிசிஆர் கருவிகளுக்கு ஆணை வழங்கப்பட்டுள்ளது. அதில், 11 லட்சத்து 51 ஆயிரத்து 800 கருவிகள் பெறப்பட்டுள்ளது. தமிழகத்துக்கு நன்கொடையாக 53,516 பிசிஆர் கருவிகள் வந்துள்ளது. மத்திய அரசிடம் இருந்து 50,000 கருவிகள் வந்துள்ளது. இதுவரை மொத்தம் 12 லட்சத்து 55 ஆயிரத்து 800 பிசிஆர் கருவிகள் பெறப்பட்டுள்ளன. இதில் 7,95,416 கருவிகள் பரிசோதனைக்கு அனுப்பட்டுள்ளது. தற்போது 5,3,339 கருவிகள் கையிருப்பில் உள்ளது என்றும் ஏற்கனவே பரிசோதனைக்கு அனுப்பப்பட்டதில் 2 லட்சத்து 92 ஆயிரத்து 77 இருக்கிறது என்று முதல்வர் தெரிவித்துள்ளார்.

Follow us

Whatsapp Google News Youtube Facebook Facebook X (formerly Twitter) Twitter Instagram Instagram

லேட்டஸ்ட் செய்திகள்