நான் பாஜகவின் மேனேஜர் அல்ல; தலைவராக வந்திருக்கிறேன்- அண்ணாமலை.!

Default Image

நான் பாஜகவின் மேனேஜர் இல்லை, இங்கு தலைவராக வந்திருக்கிறேன் என தமிழ்நாடு பாஜக தலைவர் அண்ணாமலை கூறியுள்ளார்.

பாஜகவிலிருந்து அண்மையில் முக்கிய நிர்வாகிகள் விலகி, அதிமுகவில் இணைந்தனர். அவர்கள் விலகுவதற்கு அண்ணாமலை தான் காரணம் என்றும் கூறியிருந்தனர். இதற்கு பாஜகவினர் தரப்பில் கடும் எதிர்ப்பு கிளம்பியது. இந்த நிலையில் தமிழ்நாடு பாஜக தலைவர் அண்ணாமலை செய்தியாளர்களிடம் பேட்டியளித்துள்ளார்.

பாஜக நிர்வாகிகள் விலகல் குறித்து அண்ணாமலையிடம் கேட்ட போது, தான் தமிழ்நாட்டில் பாஜகவின் மேனேஜராகஇருந்து கொண்டு, சீட்டை தேய்க்கவோ, தோசை இட்லி சுடவோ வரவில்லை, தலைவராக வந்திருக்கிறேன். தலைவராக முன்னாள் முதல்வர் ஜெயலலிதா போல, எனது முடிவுகள் இருக்கும். எனக்கு ஒரு சார்பாகவோ, பின்னால் சென்று கை, காலில் விழுவது எல்லாம் தெரியாது.

கலைஞர் போல, ஜெயலலிதா போல தலைவருக்கான முடிவுகள் எடுக்கும் போது சிலர் கோபத்தில் செல்வது வழக்கம் தான், நானும் அவர்கள் போல் பெரிய ஆள் என்று சொல்லவில்லை, அவர்கள் போல ஒரு தலைவர் தான். கட்சியின் வளர்ச்சிக்கு என்ன முடிவுகள் எடுக்கவேண்டுமோ அதைத்தான் தலைவர் செய்வார், கட்சி 2026 இல் ஆட்சியமைக்க வேண்டுமானால் இன்னும் வேகமெடுத்துதான் செல்வோமே தவிர, வேகத்தை குறைப்பது கிடையாது.

இதனால் கட்சியிலிருந்து விலகி, என்னை குற்றம் சாட்டினால் நான் அதற்கு வருத்தப்படப்போவதில்லை, தலைவராக கட்சியை வழிநடத்துகிறேன், அவ்வாறு தான் சில முடிவுகள் எடுக்க வேண்டிவரும் என்று அண்ணாமலை கூறியுள்ளார்.

Follow us

Whatsapp Google News Youtube Facebook Facebook X (formerly Twitter) Twitter Instagram Instagram

Leave a Reply

லேட்டஸ்ட் செய்திகள்