மன சோர்வில் இருக்கிறேன் – திமுக எம்பி திருச்சி சிவா
என்னைவிட என் கட்சி முக்கியம்; தனி மனிதனை விட இயக்கம் பெரிது என வாழ்ந்தவன் நான் என திருச்சி சிவா எம்.பி பேட்டி.
நேற்று திருச்சியில் டென்னிஸ் அரங்கை திறக்க எம்.பி சிவாவை அழைக்க கோரி அவரது ஆதரவாளர்கள் அமைச்சரின் காரை மறித்தனர். இதனையடுத்து திருச்சி சிவாவின் ஆதரவாளர்கள், அமைச்சர் நேருக்கு எதிராக முழக்கமிட்டுள்ளனர்.
எம்.பி திருச்சி சிவா வீட்டின் மீது தாக்குதல்
இதனையடுத்து, அமைச்சர் கே.என்.நேருவின் ஆதரவாளர்கள், எம்பி சிவா வீடு மீது தாக்குதல் நடத்தினர். இந்த தாக்குதலில் அவரது வீடு மற்றும் வீட்டின் முன்பு நின்ற கார் கண்ணாடி சேதமடைந்ததுடன், வீட்டில் இருந்த நாற்காலி, இருசக்கர வாகனம் உள்ளிட்டவை அடித்து நொறுக்கப்பட்டுள்ளது.
இதனையடுத்து, அமைச்சர் நேருவின் காரை வழிமறித்த திருச்சி சிவாவின் ஆதரவாளர்கள் 9 பேர் கைது செய்யப்பட்ட நிலையில், காவல் நிலையத்திற்குள் புகுந்த அமைச்சர் நேருவின் ஆதரவாளர்கள் அங்கிருந்து நாற்காலியை எடுத்து திருச்சி சிவாவின் ஆதரவாளர்கள் மீது தாக்குதல் நடத்தியுள்ளனர். இதில் பெண் காவலர் ஒருவர் காயமடைந்தார்.
மனச்சோர்வில் இருக்கிறேன்
இந்த நிலையில், திருச்சியில் செய்தியாளர்களுக்கு பேட்டியளித்த எம்.பி.திருச்சி சிவா, என் வீட்டின் மீதான தாக்குதல் மிகுந்த மனவேதனையை ஏற்படுத்தியுள்ளது. மனச்சோர்வில் இருக்கிறேன், வயதானவர்கள் வீட்டில் வேலை பார்க்கிறார்கள்; அனைவருமே வருத்தப்பட்டுள்ளனர். இதுகுறித்து நான் எதுவும் பேச விரும்பவில்லை. என்னைவிட என் கட்சி முக்கியம்; தனி மனிதனை விட இயக்கம் பெரிது என வாழ்ந்தவன் நான் என தெரிவித்துளளார்.