‘நான் தான் ஜெயலலிதா மகள்’ – அதிரடியாக கிளம்பிய பெண்…!
கர்நாடக மாநிலம் மைசூரை சேர்ந்த பிரேமா என்ற பெண், ‘நான் தான் ஜெயலலிதா மகள்’ என செய்தியாளர்களுக்கு பேட்டி அளித்துள்ளார்.
அதிமுகவில் ஏற்கனவே பல வகைகளில் சலசலப்புகள் நிகழ்ந்து வரும் நிலையில், கர்நாடக மாநிலம் மைசூரை சேர்ந்த பிரேமா என்ற பெண், தீபாவளி தினத்தை முன்னிட்டு சென்னை மெரினா கடற்கரையில் உள்ள ஜெயலலிதா நினைவிடத்திற்கு நேற்று அஞ்சலி செலுத்துவதற்காக வந்துள்ளார்.
அப்போதுதான் ஜெயலலிதாவின் மகள் என்று கூறியுள்ளார். இதனால் பாதுகாப்பு பணியில் ஈடுபட்டிருந்த போலீசார் அவருக்கு அஞ்சலி செலுத்த அனுமதி மறுத்தனர். இதனையடுத்து செய்தியாளர்களுக்கு பேட்டியளித்த பிரேமா, தீபாவளி தினம் என்பதால் தான் அம்மாவிடம் ஆசி வாங்க வந்தேன். ஆனால் என்னை உள்ளே விடவில்லை என்று வருத்தம் தெரிவித்தார்.
பின் சொந்த ஊர் மைசூர். சென்னை அருகில் பல்லாவரத்தில் தங்கி இருக்கிறேன். என்னை அதிமுகவில் எல்லாருக்கும் தெரியும் என தெரிவித்தார். இத்தனை நாட்களாக இங்கு வராமல் இன்றைக்கு ஏன் வந்தீர்கள் என்று செய்தியாளர்கள் கேள்வி எழுப்பினர். ‘அதற்கு சில காரணங்கள் இருக்கு’ என்று சொல்லிவிட்டு அங்கிருந்து புறப்பட்டார்.
பிரேமா என்ற பெண்ணின் செயலால் ஜெயலலிதா நினைவிடத்தில் சற்று நேரம் சலசலப்பு நிலவியது. இதற்கு முன்னதாக கடந்த 2017-ஆம் ஆண்டு அம்ருதா என்பவரும் நான்தான் ஜெயலலிதாவின் மகள் என்றும், தன் தங்கையின் மகள் என்று சொல்லி, ஜெயலலிதா யாருக்கும் சொல்லாமல் மறைத்து வைத்ததாகவும், தேவை என்றால் டிஎன்ஏ சோதனை எடுத்து பார்க்குமாறும் உச்ச நீதிமன்றத்தில் வழக்கு தொடர்ந்தார். ஆனால் இந்த மனுவை உச்ச நீதிமன்றம் நிராகரித்தது குறிப்பிடத்தக்கது.