தேசிய மக்கள் சக்தி கட்சி தலைவர் எம் .எல். ரவி என்பவர் உயர்நீதிமன்றத்தில் வழக்கு ஒன்று தொடர்ந்தார். தேர்தலில் கூட்டணி கட்சிகளின் சின்னத்தில் தோழமைக் கட்சி வேட்பாளர்கள் போட்டியிட தடை விதிக்க கோரி மனு கொடுத்திருந்தார்.
அந்த மனுவில் சமீபத்தில் நடந்து முடிந்த மக்களவை தேர்தலில் திமுக சின்னத்தில் போட்டியிட்டு வெற்றி பெற்ற பாரிவேந்தர் , ரவிக்குமார்மற்றும் ஈரோடு கணேசமூர்த்தி ஆகிய எம்.பி-களின் வெற்றி செல்லாது என அறிவிக்க வேண்டும் என அந்த மனுவில் கூறியிருந்தார்.
இந்த வழக்கு ஏற்கனவே விசாரித்த உயர்நீதிமன்றம் தேர்தல் ஆணையத்திற்கும் , திமுக சின்னத்தில் வெற்றி பெற்ற நான்கு எம்.பி களுக்கும் பதிலளிக்கும்படி உத்தரவு பிறப்பித்து இருந்தது.
அதன்படி ஈரோடு எம்பி கணேசமூர்த்தி பதில் மனு தாக்கல் செய்திருந்தார். இதில் நான் மதிமுக உறுப்பினர் பதவியில் இருந்து விலகி திமுகவில் சேர்ந்த பிறகுதான் ஈரோடு தொகுதி வேட்பாளராக அறிவிக்கப்பட்டதாக கூறினார்.
மேலும் நான் தற்போது திமுக உறுப்பினராக தான் உள்ளேன். மக்களவையில் திமுக உறுப்பினராகவே சபாநாயகர் அங்கீகரிப்பதாக, திமுக கொறடா தான் தனக்கு பேசுவதற்கு நேரம் ஒதுக்குவதாகவும் அந்த மனுவில் கூறியிருந்தார்.
சென்னை : இன்று பிரதமர் மோடி தலைமையில் மதியாய் அமைச்சரவை கூட்டம் நடைபெற்றது. அதில் அரசியல் சார்ந்து பல்வேறு முக்கிய…
சென்னை : இன்று பிரதமர் மோடி தலைமையில் மதியாய் அமைச்சரவை கூட்டம் நடைபெற்றது. அதில் அரசியல் சார்ந்து பல்வேறு முக்கிய…
சென்னை : நடப்பாண்டு ஐபிஎல் தொடரில் மோசமான ஆட்டத்தை வெளிப்படுத்தி வரும் சென்னை சூப்பர் கிங்ஸ் அணி இன்று சேப்பாக்கம் மைதானத்தில்…
சென்னை : நடிகர் ரஜினிகாந்த் தற்போது ஜெயிலர் 2 மற்றும் கூலி ஆகிய திரைப்படங்களில் நடித்து வருகிறார். இதில் கூலி திரைப்படத்தின்…
டெல்லி : இன்று பிரதமர் மோடி தலைமையில் மதியாய் அமைச்சரவை கூட்டம் நடைபெற்றது. அதில் அரசியல் சார்ந்து பல்வேறு முக்கிய…
கொல்கத்தா : நேற்று (ஏப்ரல் 29 )-ஆம் தேதி நடந்த ஐபிஎல் போட்டியில் டெல்லி கேப்பிடல்ஸ் (DC) மற்றும் கொல்கத்தா…