பிரதமரின் கூட்டத்தில் அதிமுக சார்பில் நான் கலந்து கொள்வது மகிழ்ச்சி..! – ஈபிஎஸ்
பிரதமர் மோடி தலைமையில் நடைபெறும் அனைத்து கட்சி கூட்டத்தில் கலந்துகொள்ள டெல்லி புறப்பட்டார்.
இந்தியா இந்த வருட ஜி20 மாநாடு தலைமை பொறுப்பை ஏற்று வழிநடத்த உள்ளது. இந்த மாநாட்டின் தலைமை பொறுப்பு இம்மாதம் டிசம்பர் 1, 2022 முதல் அடுத்த ஆண்டு நவம்பர் 30, 2023 வரையில் இந்தியா வசம் இருக்கும்.
இதனையடுத்து, மாநாடு விவரங்கள் பற்றி விவாதிக்க இன்று பிரதமர் மோடி தலைமையில் அனைத்து கட்சி கூட்டம் நடைபெறுகிறது. இதில் பங்கேற்க நாடு முழுவதும் பிரதான கட்சிகளுக்கு அழைப்பு விடுக்கப்பட்டுள்ள நிலையில், தமிழக முதல்வர் மு.க.ஸ்டாலினுக்கும் அழைப்பு விடுக்கப்பட்டது. அதேபோல், எதிர்க்கட்சி தலைவர் எடப்பாடி பழனிசாமிக்கும் அழைப்பு விடுக்கப்பட்டுள்ளது. இதனையடுத்து, இந்த அனைத்து கலந்து கொள்வதற்காக ஈபிஎஸ் டெல்லி புறப்பட்டார்.
இதுகுறித்து செய்தியாளர்களுக்கு பேட்டியளித்த அவர், பிரதமரின் கூட்டத்தில் அதிமுக சார்பில் நான் கலந்து கொள்வது மகிழ்ச்சி தருகிறது. ஜி20 மாநாடு தலைமை பொறுப்பை ஏற்பதற்கான சூழலை ஏற்படுத்திய பிரதமருக்கு நன்றி என தெரிவித்துள்ளார்.