‘நான் போகிறேன்! வரமாட்டேன்’ – இறப்பு என்னை தழுவும் வரை அரசியலில் ஈடுபடமாட்டேன்!- தமிழருவி மணியன்

காந்திய மக்கள் இயக்க நண்பர்களின் அடி தொழுது நான் விடைபெறுகிறேன். இறப்பு என்னைத் தழுவும் இறுதி நாள் வரை நான் அரசியலில் மீண்டும் அடியெடுத்து வைக்க மாட்டேன்.
நடிகர் ரஜினிகாந்த் அவர்கள் புதிதாக கட்சி ஆரம்பிப்பதாக தெரிவித்திருந்த நிலையில், அவரது உடல் நிலையை கருத்தில் கொண்டு, ‘கட்சி தொடங்க போவதில்லை’ என நேற்று அறிவித்து இருந்தார். இதனையடுத்து அந்த கட்சியின் மேற்பார்வையாளராக தமிழருவி மணியன் நியைக்கப்பட்டிருந்த நிலையில், இதுகுறித்து அவர் அறிக்கை வெளியிட்டுள்ளார்.
அந்த அறிக்கையில், மக்களை நலன் சார்ந்த ஒரு மேன்மையான மாற்று அரசியல், இந்த மண்ணில் மலரவேண்டும், மீண்டும் காமராஜர் ஆட்சியை தமிழகம் தரிசிக்க வேண்டும் என்ற கனவை நனவாக்க முயற்சித்தது தான் நான் செய்த குற்றம். மாணிக்கத்திற்கும் கூழாங்கற்களும் பேதம் தெரியாத அரசியல் உலகில், இனி நான் சாதிக்க ஒன்றும் இல்லை.
என் நேர்மையும், தூய்மையும், வாழ்வியல் ஒழுக்கமும் போற்றப்பட அரசியல் களத்தில் இருந்து முற்றாக விலகி நிற்பதே விவேகமானது. எந்த கைமாறும் கருதாமல் சமூக நலனுக்காக என்னுடன் கைகோர்த்து நடந்த காந்திய மக்கள் இயக்க நண்பர்களின் அடி தொழுது நான் விடைபெறுகிறேன். இறப்பு என்னைத் தழுவும் இறுதி நாள் வரை நான் அரசியலில் மீண்டும் அடியெடுத்து வைக்க மாட்டேன். திமுகவில் இருந்து விலகும் போது கண்ணதாசன் போய் வருகிறேன் என்றார். ‘நான் போகிறேன் வரமாட்டேன்’ என்று அவர் தெரிவித்துள்ளார்.
லேட்டஸ்ட் செய்திகள்
“பொறுமைக்கும் எல்லை உண்டு.., வரம்பு மீறி போறீங்க.!” சேகர்பாபு மீது அண்ணாமலை கடும் விமர்சனம்!
April 17, 2025
அதிமுக – பாஜக : “கூட்டணி தான் ஆனால் கூட்டணி ஆட்சி இல்லை” – தம்பிதுரை பரபரப்பு விளக்கம்!
April 17, 2025
இபிஎஸ் பதில் தான் என்னோட பதில்! செய்தியாளர் கேட்ட கேள்விக்கு டென்ஷனான முன்னாள் அமைச்சர் ஜெயக்குமார்!
April 17, 2025
வரலாறு காணாத உச்சம்! 71 -ஆயிரத்தை தாண்டிய தங்கம் விலை!
April 17, 2025