நான் நலமுடன் இருக்கிறேன்.! மருத்துவமனையில் இருந்து வீடியோ வெளியிட்ட இ.வி.கே.எஸ்.இளங்கோவன்.!

Default Image

நான் நலமுடன் இருக்கிறேன். – இவிகேஎஸ்.இளங்கோவன் வீடியோ மூலம் விளக்கம்.

ஈரோடு கிழக்கு தொகுதி சட்டமன்ற உறுப்பினர் இ.வி.கே.எஸ்.இளங்கோவன் கடந்த 15-ஆம் தேதி உடல் நலக்குறைவு காரணமாக சென்னை ராமச்சந்திரா மருத்துவமனையில் சிகிச்சைக்காக அனுமதிக்கப்பட்டார்.

கொரோனா தொற்று :

இதனை அடுத்து இவருக்கு மருத்துவர்கள் தீவிர சிகிச்சை அளித்து வந்த நிலையில், அவருக்கு புதிய வகை கொரோனா தொற்று இருப்பது உறுதி செய்யப்பட்டு, அதற்கான சிகிச்சை அளிக்கப்பட்டு வந்தது.

கொரானாவில் இருந்து மீட்பு :

இந்நிலையில் அவர் கொரோனாவில் இருந்து மீண்டு விட்டதாக இன்று காலை மருத்துவமனை நிர்வாகம் அறிக்கை வெளியிட்டுள்ளது.  அவருக்கு தொடர் சிகிச்சை அளித்து வருவதாகவும் அதில் குறிப்பிடப்பட்டு இருந்தது.

இளங்கோவன் வீடியோ :

தற்போது, நான் நலமுடன் உள்ளதாக இவிகேஎஸ்.இளங்கோவன் வீடியோ வெளியிட்டுள்ளார். அதில் நான் நலமுடன் இருக்கிறேன். இன்னும் 2 நாளில் டிஸ்சார்ஜ் ஆகிவிடுவேன் என கூறியுள்ளார்.

Follow us

Whatsapp Google News Youtube Facebook Facebook X (formerly Twitter) Twitter Instagram Instagram

Leave a Reply

லேட்டஸ்ட் செய்திகள்