சென்னையில் மாணவிக்கு நடந்த துயரத்தை அறிந்து நொறுங்கி போயுள்ளேன்! – முதலமைச்சர் ஸ்டாலின்

Default Image

ஒவ்வொரு தனி மனிதனுக்கும் நன்மை அளிக்கக்கூடிய அரசாக திராவிட மாடல் அரசு செயல்பட்டு வருகிறது என முதலமைச்சர் உரை.

சென்னை ராயப்பேட்டையில் உள்ள தனியார் கல்லூரியில் 300க்கும் மேற்பட்ட நிறுவனங்கள் பங்குபெறும் மாபெரும் வேலைவாய்ப்பு முகாமை முதலமைச்சர் முக ஸ்டாலின் தொடங்கி வைத்தார். தொழிலாளர் நலன் மற்றும் திறன் மேம்பாட்டு துறை அமைச்சர் உள்ளிட்டோர் இந்நிகழ்ச்சியில் பங்கேற்றனர். இந்த வேலைவாய்ப்பு முகாமை தொடக்க நிகழ்ச்சியில் பேசிய முதலமைச்சர் ஸ்டாலின், வேலைவாய்ப்பு முகாம்கள் எனக்கு மனநிறைவை அளிக்கின்றன. 234 தொகுதிகளிலும் வேலைவாய்ப்பு முகாம்கள் நடத்த வேண்டும். தகுதிக்கும், திறமைக்கும் ஏற்ற வேலைகள் இளைஞர்களுக்கு நிச்சயம் கிடைக்கும் என தெரிவித்தார்.

கொளத்தூர் தொகுதியிலும் மாபெரும் வேலைவாய்ப்பு முகாம் நடத்தப்பட வேண்டும். 10,000 தொழிலாளர்களுக்கு வீட்டு வசதி திட்டம் அறிமுகப்படுத்தப்பட்டுள்ளது. கடைகளில் வேலை பார்க்கும் பணியாளர்களுக்கு இருக்கை வசதி அமைத்து கொடுக்க சட்டம் இயற்றியது திமுக அரசு. ஓராண்டில் ஒருய லட்சம் பேருக்கு வேலைவாய்ப்பு என்பது மிகப்பெரிய சாதனை. கடந்த 15 மாதங்களில் 882 வேலைவாய்ப்பு முகாம்கள் நடத்தப்பட்டுள்ளன. இதுவரை நடத்தப்பட்ட வேலைவாய்ப்பு முகாம்கள் மூலம் 99,989 பேர் வேலைவாய்ப்பு பெற்றுள்ளனர்.

ஒவ்வொரு தனி மனிதனுக்கும் நன்மை அளிக்கக்கூடிய அரசாக திராவிட மாடல் அரசு செயல்பட்டு வருகிறது. வேலைக்கு தகுதியான இளைஞர்களை உருவாக்கவே இந்த அரசு செயல்பட்டு வருகிறது எனவும் கூறினார். இதன்பின் பேசிய முதல்வர், சென்னையில் மாணவி சத்யாவுக்கு நடந்த துயரத்தை அறிந்து நொறுங்கி போயுள்ளேன். இதுவல்ல நாம் காண விரும்பும் சம்பவம், தமிழ்நாட்டில், இனி எந்த பெண்ணுக்கும் இதுபோல நடக்காமல் தடுக்க வேண்டிய கடமை ஒரு சமூகமாக நமக்கு உள்ளது. இயற்கையிலேயே ஆண்கள் வலிமையுள்ளவர்களாக இருக்கலாம், அந்த வலிமை அடுத்தவர்களை கட்டுப்படுத்துவதற்காக இருக்கக்கூடாது. பெண்களை பாதுகாக்கக்கூடியதாக இருக்க வேண்டும் என்றும் தெரிவித்தார்.

Follow us

Whatsapp Google News Youtube Facebook Facebook X (formerly Twitter) Twitter Instagram Instagram

Leave a Reply

லேட்டஸ்ட் செய்திகள்