“பாராலிம்பிக்கில் தங்கம் வென்ற அவனி லெஹாராவின் அபாரமான சாதனையால் நான் மகிழ்ச்சியடைகிறேன்” – முதல்வர் ஸ்டாலின்..

பாராலிம்பிக்கில் இன்று பதக்கம் வென்றவர்களுக்கு முதல்வர் ஸ்டாலின் வாழ்த்து தெரிவித்துள்ளார்.
ஜப்பான் தலைநகர் டோக்கியோவில் 16வது பாராலிம்பிக் போட்டிகள் நடைபெற்று வருகிறது.அதன்படி,நேற்று பாராலிம்பிக் போட்டிகளில் இந்தியா இரண்டு வெள்ளி,ஒரு வெண்கலம் வென்றது.
இதனையடுத்து,இன்று நடைபெற்ற மகளீர் 10 மீட்டர் ஏர்ரைபிள் துப்பாக்கி சுடுதல் இறுதிப்போட்டியில், இந்தியாவை சேர்ந்த வீராங்கனை அவனி லெகாரா தங்கப்பதக்கம் வென்று புதிய சாதனைப் படைத்துள்ளார். ஏனெனில்,பாராலிம்பிக் வரலாற்றில் இந்திய வீராங்கனை ஒருவர் தங்கம் வெல்வது இதுவே முதல்முறை.
அதேபோல்,வட்டு எறிதல் போட்டியில் இந்தியாவின் யோகேஷ் கத்தூனியா வெள்ளிப்பதக்கமும் ,ஆண்கள் ஈட்டி எறிதல் எஃப் 46 இறுதிப் போட்டியில்,தேவேந்திர ஜஜாரியா வெள்ளியும்,சுந்தர் சிங் குர்ஜார் வெண்கலமும் வென்று சாதனை புரிந்துள்ளனர்.இதனால்,தற்போது இந்தியா 7 பதக்கங்களை வென்று பாராலிம்பிக் வரலாற்றில் புதிய சாதனை படைத்துள்ளது.இதனால்,பதக்கம் வென்ற இந்திய வீரர்களை பலரும் பாராட்டி வருகின்றனர்.
இந்நிலையில்,தமிழக முதல்வர் ஸ்டாலின் அவர்கள்,பாராலிம்பிக்கில் இன்று பதக்கம் வென்றவர்களுக்கு வாழ்த்து தெரிவித்துள்ளார்.மேலும்,இது தொடர்பாக அவர் தனது ட்விட்டர் பக்கத்தில் கூறியதாவது:
“பாராஷூட்டிங்கில் அவனி லெஹாரா வரலாற்று தங்கப் பதக்கம் பெற்றுள்ளார்.உங்கள் அபாரமான சாதனையால் நான் மகிழ்ச்சியடைகிறேன்.மேலும்,வட்டு எறிதலில் யோகேஷ் கத்துனியாவின் வெள்ளிக்கு நான் வாழ்த்துகிறேன்.அதேபோல,ஈட்டி எறிதலில் தேவேந்திர ஜஜாரியா வெள்ளியும்,சுந்தர் சிங் குர்ஜார் வெண்கலப் பதக்கமும் வென்றதற்காக வாழ்த்துக்கள்”,என்று தெரிவித்துள்ளார்.
Congratulations to @AvaniLekhara for her historic #Gold medal in #ParaShooting. I’m elated by your phenomenal achievement. I also congratulate #YogeshKathuniya for his #Silver in Discus Throw and @DevJhajharia & @SundarSGurjar for winning #Silver and #Bronze medal in Javelin F46. pic.twitter.com/TWG6vWHPZu
— M.K.Stalin (@mkstalin) August 30, 2021
லேட்டஸ்ட் செய்திகள்
மீனவர்கள் பிரச்சனை: “கூட்டுப் பணிக்குழுவை உடனடியாக கூட்டுங்கள்..” – மு.க.ஸ்டாலின் கடிதம்.!
February 23, 2025
NDvsPAK : டாஸில் மோசமான சாதனை படைத்த இந்தியா!! விக்கெட்டுகளை இழந்து மந்தமாக ஆடி வரும் பாகிஸ்தான்…
February 23, 2025
வசூல் ராஜா யாரு? டிராகனா? NEEK-ஆ? இரண்டு படங்களின் பாக்ஸ் ஆபிஸ் விவரம்.!
February 23, 2025