இவரது மறைவு செய்தியறிந்து மிகவும் வருத்தமுற்றேன் – முதல்வர் மு.க.ஸ்டாலின்

தேசத் தந்தை அண்ணல் காந்தியடிகளின் பேரன் அருண் காந்தி மறைவுக்கு முதல்வர் இரங்கல்
கோல்ஹாப்பூரில் காந்தியின் பேரனும் எழுத்தாளருமான அருண் மணிலால் காந்தி(83) காலமானார். காந்தியின் மகனான மணிலால் காந்திக்கு பிறந்தவர் அருண் மணிலால் காந்தி. இவரது மறைவுக்கு தலைவர்கள் இரங்கல் தெரிவித்துள்ளனர்.
அந்த வகையில், தமிழக முதல்வர் மு.க.ஸ்டாலின் அவர்கள், இரங்கல் தெரிவித்து வெளியிட்டுள்ள செய்தி குறிப்பில், தேசத் தந்தை அண்ணல் காந்தியடிகளின் பெயரனும் எழுத்தாளருமான திரு. அருண் காந்தி அவர்கள் மறைந்தார் என்ற செய்தியறிந்து வருத்தமுற்றேன். அவரது மறைவிற்கு ஆழ்ந்த இரங்கலையும் அவரது குடும்பத்தினர் மற்றும் உறவினர்களுக்கு ஆறுதலையும் தெரிவித்துக் கொள்கிறேன் என தெரிவித்துள்ளார்.
மாண்புமிகு தமிழ்நாடு முதலமைச்சர் திரு. மு.க.ஸ்டாலின் அவர்களின் இரங்கல் செய்தி#CMMKSTALIN #TNDIPR@CMOTamilnadu @mkstalin@mp_saminathan pic.twitter.com/SLyZ50Z2Ck
— TN DIPR (@TNDIPRNEWS) May 2, 2023