லஞ்ச ஒழிப்பு துறை சோதனைக்கு நானும் தயாராக உள்ளேன் – முன்னாள் அமைச்சர் ஜெயக்குமார்

Default Image

லஞ்ச ஒழிப்பு சோதனைக்கு நானும் தயாராக உள்ளேன். எப்போது வேண்டுமானாலும் லஞ்ச ஒழிப்புத்துறை எனது வீட்டுக்கு வந்து சோதனை நடத்தலாம் என அதிமுக முன்னாள் அமைச்சர் ஜெயக்குமார் தெரிவித்துள்ளார். 

அதிமுக முன்னாள் உயர்கல்வித்துறை அமைச்சர் கே.பி.அன்பழகனுக்கு தொடர்புடைய வீடு உள்ளிட்ட 57 இடங்களில் லஞ்ச ஒழிப்புத்துறை போலீசார் சோதனை நடத்திய நிலையில், கே.பி.அன்பழகன் மற்றும் அவரது மனைவி மல்லிகா,மகன்கள் சசிமோகன், சந்திரமோகன்,மருமகள் வைஷ்ணவி ஆகியோர் வருமானத்துக்கு அதிகமாக ரூ.11.32 கோடி சொத்து சேர்த்ததாக கூறி,அவர்கள் 5 பேர் மீது லஞ்ச ஒழிப்புத்துறை வழக்குப்பதிவு செய்துள்ளது.

இந்நிலையில், இதுகுறித்து முன்னாள் அமைச்சர் ஜெயக்குமார் அவர்கள் கூறுகையில், ‘கே.பி.அன்பழகனுக்கு சொந்தமான இடங்களில் நடைபெறும் ரெய்டு மக்களின் கவனத்தை திசை திருப்பும் முயற்சி. அதிமுகவை அழித்து நற்பெயருக்கு களங்கம் விளைவிப்பதே திமுகவின் நோக்கம். நகர்ப்புற உள்ளாட்சி தேர்தல் நெருங்குவதால், மக்கள் மத்தியில் திமுக அவதூறுகளை பரப்புகிறது. சட்டமன்றத்தை கலைத்து விட்டு தேர்தல் நடத்த மு.க.ஸ்டாலின் தயாரா?, தேர்தலை நடத்தினால் ஒரு தொகுதியில் கூட திமுக ஜெயிக்காது என்று தெரிவித்துள்ளார்.

மேலும், தேர்தலில் கொடுத்த வாக்குறுதிகளை, திமுக நிறைவேற்றாமல் மக்களை திசைதிருப்ப பார்க்கிறது.  லஞ்ச ஒழிப்பு சோதனைக்கு நானும் தயாராக உள்ளேன். எப்போது வேண்டுமானாலும் லஞ்ச ஒழிப்புத்துறை எனது வீட்டுக்கு வந்து சோதனை நடத்தலாம் என தெரிவித்துள்ளார்.

Follow us

Whatsapp Google News Youtube Facebook Facebook X (formerly Twitter) Twitter Instagram Instagram

லேட்டஸ்ட் செய்திகள்