மதுரை: நடந்து முடிந்த மக்களவைத் தேர்தலில் ராமநாதபுரம் மக்களவை தொகுதியில் பாஜக தலைமையிலான தேசிய ஜனநாயக கூட்டணியின் சார்பாக சுயேட்சையாக முன்னாள் முதல்வர் ஓ.பன்னீர்செல்வம் போட்டியிட்டார். அவருக்கு பலாப்பழம் சின்னம் ஒதுக்கப்பட்டிருந்தது. கடந்த ஏப்ரல் 19ஆம் தேதி தேர்தல் நடைபெற்று முடிந்த நிலையில், நாளை தேர்தல் முடிவுகள் வெளியாக உள்ளது.
இந்நிலையில் மதுரை மீனாட்சி அம்மன் கோவிலுக்கு சுவாமி தரிசனம் செய்ய முன்னாள் முதல்வர் ஓ.பன்னீர் செல்வம் வந்திருந்தார். சாமி தரிசனம் செய்துவிட்டு பின்னர் செய்தியாளர்களிடம் பேசுகையில், தனது வெற்றி வாய்ப்பு பிரகாசமாக இருப்பதாக தெரிவித்தார். மேலும், இந்த தேர்தல் இந்திய திருநாட்டை யார் ஆள வேண்டும் என்பது பற்றிய தேர்தல் என்றார்.
மேலும், பாரதிய ஜனதா கட்சி பெருவாரியான இடங்களில் வெற்றி பெற்று ஆட்சியைப் பிடிக்கும் என்றும், பாரத பிரதமர் நரேந்திர மோடி மீண்டும் பிரதமராக தேர்ந்தெடுக்கப்படுவார் என்றும் ஓபிஎஸ் தெரிவித்தார்.
என்னை பொறுத்தவரை பலன்களை எதிர்பார்த்து கட்சி வேலை செய்பவன் அல்ல கட்சிக்கு விசுவாசமாக உழைப்பவன். இன்றைய காலகட்டத்தில் நாட்டில் உள்ள தவறுகளை சுட்டிக்காட்டும் இயக்கமாக அதிமுக உரிமை மீட்பு குழு செயல்பட்டு வருகிறது. நான் மத்திய அமைச்சராக வருவது இறைவன் கையில் தான் உள்ளது. அரசியல் நடப்பை நான் உன்னிப்பாக கவனித்து வருகிறேன் என்றும் மதுரையில் செய்தியாளர் சந்திப்பில் ஓ.பன்னீர்செல்வம் கூறினார்.
தருமபுரி : தவெக தலைவர் விஜய், 2026 தேர்தலில் தாம் போட்டியிட இருக்கும் தொகுதி குறித்து தீவிரமாக ஆலோசித்து வருகிறார்.…
சென்னை : மாலத்தீவு மற்றும் பூமத்திய ரேகையை ஒட்டிய இந்திய பெருங்கடல் பகுதிகள் முதல் தென்கிழக்கு அரபிக்கடல் பகுதிகள் வரை…
சென்னை : தெலுங்கு மக்கள் குறித்து அவதூறாக பேசிய வழக்கில், நடிகை கஸ்தூரியை வருகிற 29ஆம் தேதி வரை நீதிமன்றக்…
டெல்லி : ஆம் ஆத்மி கட்சியில் முக்கிய பொறுப்பில் இருந்த கைலாஷ் கெலாட் தனது அமைச்சர் பதவி மற்றும் ஆம்…
சான் பிரான்சிஸ்கோ : உலக பணக்காரர்களில் முதன்மையானவர்களாக இருக்கும் எலான் மஸ்க், தனது ஸ்பேஸ் எக்ஸ் நிறுவனத்தின் ஸ்டார்ஷிப் மூலம்…
சென்னை : மாலத்தீவு மற்றும் பூமத்திய ரேகையை ஒட்டிய இந்திய பெருங்கடல் பகுதிகள் முதல் தென்கிழக்கு அரபிக்கடல் பகுதிகள் வரை…