உதயநிதியை அமைச்சராக்க வேண்டும் என நானும் விரும்புகிறேன் என்று அமைச்சர் எம்.ஆர்.கே பன்னீர்செல்வம் பேட்டி.
தருமபுரி மாவட்டத்தில் பொதுமக்கள் குறை தீர்க்கும் சிறப்பு முகாமில் தமிழக உழவர் மற்றும் விவசாயத்துறை அமைச்சர் எம்.ஆர்.கே.பன்னீர்செல்வம் கலந்துகொண்டு பொது மக்களின் மனுக்களை பெற்றுக்கொண்டார். இதன்பின் பேசிய அவர், உதயநிதியை அமைச்சராக்க வேண்டும் என நானும் விரும்புகிறேன். அவரால் பல நல்ல திட்டங்கள் பொது மக்களுக்கு எளிதில் கிடைக்கும் என்றார்.
கடந்த ஆறு மாத காலமாக சட்டமன்ற உறுப்பினராக உதயநிதி ஸ்டாலின் சிறப்பாக பணியாற்றி வருகிறார். உழைப்பவர்களுக்கு மரியாதை உண்டு. இந்த இளம் வயதில் வீடு வீடாக சென்று மக்களை சந்தித்து நல்ல முறையில் பணியாற்றி வருகிறார். எனவே, உதயநிதி அமைச்சரானால் மக்களுக்கு லாபம்தான் என தெரிவித்தார்.
இதுபோன்று உதயநிதி ஸ்டாலின் சென்னை மேயராக பொறுப்பேற்க வாய்ப்பு உள்ளதா என்ற கேள்விக்கு பதிலளித்த அமைச்சர் அன்பில் மகேஷ், சட்டமன்ற உறுப்பினராக உதயநிதி ஸ்டாலின் மிக சிறப்பாக செயல்பட்டு வருகிறார். கூடுதலாக அந்த பொறுப்பும் வழங்கினாலும் சரி, அமைச்சர் பதவி வழங்கினாலும் அவர் சிறப்பாக செயல்படுவார் என தெரிவித்திருந்தார்.
தமிழகம் முழுவதும் சுற்றுப்பயணம் செய்து தேர்தல் வெற்றிக்காக அரும்பாடுபட்ட உதயநிதி ஸ்டாலின் தனது தொகுதியில் சிறப்பாகச் செயல்படுபவர். அவர் அமைச்சராக வருவதில் எங்களுக்கு ஆச்சர்யம் இல்லை.அதனை வரவேற்போம் அமைச்சர் கே.என்.நேரு கூறியிருந்தார்.
மேலும், உதயநிதி ஸ்டாலின் அனைவரும் பாராட்டும் அளவிற்கு செயல்பட்டு வருகிறார். வெகுவிரைவில் உதய நிதி அமைச்சராக வர வேண்டும். தமிழ்நாடு முழுவதும் அமைச்சராக அவரது பணி தொடர வேண்டும் என்று வணிகவரி மற்றும் பதிவுத்துறை அமைச்சர் மூர்த்தி மதுரையில் தெரிவித்திருந்தார். இந்த வரிசையில் தற்போது அமைச்சர் எம்.ஆர்.கே பன்னீர்செல்வமும் இடம்பெற்றுள்ளார்.
டெல்லி : இந்திய அணியின் இளம் கிரிக்கெட் வீரர்களான ருதுராஜ் கெய்க்வாட், இஷான் கிஷன், சஞ்சு சாம்சன் போன்ற வீரர்களுக்கு…
கோவை : ஆரோக்கியசாமி சாலை, ராமச்சந்திரா சாலை, டி.பி.ரோடு, லாலி சாலை, தடாகம் சாலை, கவுலிபிரவுன் சாலை, டி.வி.சாமி சாலை,…
சென்னை : விடுதலை 2 திரைப்படம் வெற்றிமாறனின் தலை சிறந்த படைப்புகளின் பட்டியலில் இடம் பெற்றுவிட்டது என்று தான் சொல்லவேண்டும். அந்த…
சென்னை : தமிழகத்தில் உள்ள அரசு பள்ளிகளில் 6-முதல் 12-ஆம் வகுப்பு வரை படிக்கும் மாணவ மாணவியர்களின் உயர் கல்விக்கான செலவை…
சென்னை : மத்திய அரசின் தேசிய தேர்வு முகமையால் நடத்தப்படும் யுஜிசி – நெட் தேர்வு 30 பாடங்களுக்கு ஜனவரி 15,…
டெல்லி : கடந்த ஆகஸ்ட் மாதம் வங்கதேசத்தில் ஏற்பட்ட உள்நாட்டு கலவரத்தில் நூற்றுக்கணக்கானோர் உயிரிழந்தனர். இந்த உள்நாட்டு கிளர்ச்சி உச்சத்தில்…