நிறைவேறிய ஆசை.! தங்கள் மனைவியை நடுரோட்டில் மண்பானையை போட்டு உடைப்பது போல பொத்தென்று போட்ட கணவர்கள்.!
- வெளிநாடுகளில் மனைவியை கணவனும், கணவனை மனைவியும் தூக்கிக் கொண்டு ஓடுவது ஆரம்பத்தில் அங்கு நடத்தப்பட்டது.
- தென்காசியில் நடந்த பொங்கல் விளையாட்டு போட்டியில் மனைவியை கணவன் தூக்கிச்செல்லும் போட்டி நடத்தப்பட்டது. போட்டியை காண வந்த கிராமவாசிகள் குதூகலமாக கொண்டாடப்பட்டு மகிழ்ச்சியடைந்தனர்.
பின்லாந்து நாட்டில் ஆரம்பிக்கப்பட்ட பொழுதுபோக்கான விளையாட்டாக மனைவியை கணவனும், கணவனை மனைவியும் தூக்கிக் கொண்டு ஓடுவது ஆரம்பத்தில் அங்கு நடத்தப்பட்டது. அதைத்தொடர்ந்து அமெரிக்கா, இங்கிலாந்து, ஆஸ்திரேலியா போன்ற நாடுகளிலும் இந்தப் போட்டி பிரபலமானது. தற்போது இந்த போட்டி சாம்பியன் சிப் போட்டியாக நீரிலும், நிலத்திலும், சகதியிலும் ஜோடிகளாக களமிறங்கி செல்லும் விதமாக மற்றும் பாதுகாப்பு விதிமுறைகளுடன் நடத்தப்படுகின்றது.
இந்நிலையில் பொங்கல் பண்டிகையை முன்னிட்டு தமிழகத்தின் தென்காசி மாவட்டத்தில் வீரசிகாமணி என்ற கிராமத்தில் நடந்த பொங்கல் விளையாட்டு போட்டியில் மனைவியை கணவன் தூக்கிச்செல்லும் போட்டி நடத்தப்பட்டது. அதுவம் தார்சாலையில் நடத்தப்பட்ட இந்த போட்டியில் தங்கள் மனைவிகளை குழந்தைகளை போல கையில் தூக்கிக் கொண்டும், முதுகில் உப்பு மூட்டை சுமந்து கொண்டும் கணவன்மார்கள் இருந்தார்கள். போட்டி ஆரம்பித்ததும், ஒருவரை ஒருவர் இடித்துக்கொண்டு மனைவிய தூக்கிக்கொண்டு ஓடினர்.
மனைவியை தூக்கிச்சென்ற கணவர்கள் 3 பேரும் தங்கள் மனைவியை நடுரோட்டில் மண் பானையை போட்டு உடைப்பது போல பொத்தென்று போட்டு அவர்களும் விழுந்தனர். மனைவியை உப்பு மூட்டை போல சுமந்து சென்ற இருவர் மட்டும் வெற்றிகரமாக எல்லைக் கோட்டை தொட்டனர். தகுந்த பாதுகாப்பு ஏற்பாடுகள் இன்றி குறுகலான சாலையில் நடத்தப்பட்ட இந்த போட்டியை பயன்படுத்தி 3 கணவன்மார்கள் தங்கள் நீண்ட நாள் ஆசையை நிறைவேற்றிக் கொண்டதாக கமெண்ட் அடித்தாலும், விழுந்தவர்களுக்கு தான் வலி தெரியும் என்கின்றனர் போட்டி நடத்துவோர். பின்னர் போட்டியை காண வந்த கிராமவாசிகள் குதூகலமாக கொண்டாடப்பட்டு, வெளிநாடுகளில் நடக்கும் இந்த போட்டி நம்ம ஊரிலும் நடந்துருக்கு என்று கருத்து கூறி மகிழ்ச்சியடைந்தனர்.