திருப்பூர் மாவட்டம் ஊத்துக்குளியில் திருமூர்த்தி மற்றும் செல்வம் என்ற நண்பர்கள் ஒரு பனியன் நிறுவனத்தில் வேலைபார்த்துவந்துள்ளனர்.இந்நிலையில் இருவரும் நண்பர்கள் என்பதால் பக்கத்து பக்கத்து வீடுகளில் தங்கி இருந்துள்ளன.
திருமூர்த்தியின் மனைவி ராஜேஸ்வரி,செல்வத்தின் மனைவி வசந்தாமணி.இந்நிலையில் வசந்த ராஜ் என்ற தரகர் ஒருவர் இருவரின் மனைவிக்கும் வெளிநாட்டில் வேலைவாங்கி தருவதாக அறிமுகமாகியுள்ளார்.
அவரின் பேச்சை நம்பி இருவரின் மனைவியும் குவைத் நாட்டில் வீட்டு வேலைக்காக கடந்த மாதம் சென்றுள்ளனர்.இதன் அடிப்படையில் ஒரு மாதம் ஆகியும் சம்பளம் முறையாக தராமல் வீட்டின் உரிமையாளர் கொடுமைப்படுத்துவதாக தொலைபேசி மூலம் குவைத் நாட்டில் இருந்து தெரிவித்துள்ளனர்.
இந்நிலையில் கடந்த இரு வாரமாக அவர்களிடம் இருந்து எந்தவிதமான தொடர்பும் இல்லாததாலும் தரகரும் முறையான பதிலை தராததாலும் திருமூர்த்தியும் செல்வமும் அதிர்ச்சி அடைந்துள்ளனர்.
இதனை தொடர்ந்து இவர்கள் வெளிநாட்டில் கொத்தடிமையாக இருக்கும் தங்கள் இருவரின் மனைவியையும் மீட்டு தருமாறு மனு அளித்துள்ளனர்.இந்த சம்பவம் அப்பகுதியில் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.
சென்னை : தென்தமிழக கடலோரப்பகுதிகளின் மேல் ஒரு வளிமண்டல கீழடுக்கு சுழற்சி நிலவுகிறது இதன் காரணமாக நேற்று சில மாட்டவங்களில் மழை…
ஸ்ரீநகர் : நேற்று (ஏப்ரல் 22) உலகம் முழுவதும் அதிர்ச்சியை ஏற்படுத்தும் வகையில், ஜம்மு-காஷ்மீரின் ஆனந்த்நாக் மாவட்டம், பஹல்காம் பகுதியில்…
லக்னோ : கடந்த ஆண்டு லக்னோ அணிக்காக கேப்டனாக விளையாடிய கே.எல்.ராகுல் சில போட்டிகளில் அணி தோல்வி அடைந்த காரணத்தால் உரிமையாளரிடம்…
ஸ்ரீநகர் : ஜம்மு-காஷ்மீர், ஆனந்த்நாக் மாவட்டத்தின் பஹல்காம் பகுதியில் உள்ள பைசரான் பள்ளத்தாக்கில் ஏப்ரல் 22 அன்று மாலை தீவிரவாதிகள்…
லக்னோ : இன்றைய ஐபிஎல் போட்டியில் லக்னோ கிரிக்கெட் மைதானத்தில் லக்னோ சூப்பர் ஜெயிண்ட்ஸ் அணியும், டெல்லி கேபிட்டல்ஸ் அணியும்…
லக்னோ : இன்றைய ஐபிஎல் போட்டியில் ரிஷப் பண்ட் தலைமையிலான லக்னோ சூப்பர் ஜெயிண்ட்ஸ் அணியும், அக்சர் படேல் தலைமையிலான…