கொரோனா வைரஸ் தடுப்பு என கூறி கணவனுக்கு கசாயத்தில் தூக்க மாத்திரை கலந்து கொடுத்து சொந்த வீட்டிலேயே 100 சவரன் நகைகளை திருடி நாடகமாடிய மனைவியை கையும் களவுமாக பிடித்துள்ளது காவல்துறை.
தூத்துக்குடி தளாமுத்து நகர் அருகே பெரிய செல்வர் நகர் உள்ளது அங்கு வின்சென்ட் சாவேரியார் பிச்சை.வ.உ.சி துறைமுகத்தில் கிரேன் ஆப்ரேட்டராக பணியாற்றி வருகிறார்.இவர் தன்னுடைய மனைவியான ஜான்சி ராணியோடு தனியாக வசித்து வருகிறார்.வின்செண்ட் கஞ்சத்தனமாக இருந்து வந்ததாக கூறப்படுகிறது.இதனால் பணத் தேவைக்காக வீட்டிலிருந்த நகைகளை திருட முடிவெடுத்தாக கூறப்படுகிறது.
இந்நிலையில் ஊரடங்கு அமலில் இருப்பதால் கணவரை எவ்வாறு ஏமாற்றலாம் என திட்டிமிருந்த மூளையில் உதயமான யோசனை தான் கசாயத்தில் தூக்க மாத்திரையை கலந்து கொரோனா தடுப்பு மருத்து எனக் கூறி கணவனுக்கு கொடுத்துள்ளார்.இதை அருந்திய வின்செண்ட் மயக்க நிலைக்கு சென்றதை பயன்படுத்தி வீட்டில் இருந்த 100 சவரன் நகைகளை திருடி அதை வீட்டின் அருகிலேயே புதைத்தும் வைத்து உள்ளார்.
பின்னர் நகைகள் திருடு போனது போல வீட்டில் அனைத்தையும் கலைத்து விட்டு; கணவனிடம் சென்று நகை திருடு போனது போல முறையிட்டுள்ளார்.இது குறித்து வின்சென்ட் காவல்துறையில் இது குறித்து புகார் அளித்துள்ளார். புகாரை தொடர்ந்து விசாரிக்க தொடங்கிய காவல்துறை ஒரு கட்டத்தில் ஜான்சி ராணி மேல் சந்தேகம் வர அவரை விசாரணை வளைத்திற்குள் கொண்ட வந்த காவலில் கிடுக்குப்பிடி விசாரணையில் திருடியதை ஒப்புக்கொண்ட ஜான்சி ராணியை கைது செய்தனர்.ஆனால் கொரோனா தொற்றுக் காரணமாக அவர் ஜாமீனில் விடுவிக்கப்பட்டார்.
டெல்லி : உடல் நலக்குறைவால் நடிகர் டெல்லி கணேஷ் நேற்று இரவு தூங்கிக் கொண்டிருக்கும் போதே உயிரிழந்தார். அவரது மறைவு…
பலுசிஸ்தான் : நேற்று காலை 9 மணி அளவில் பலுசிஸ்தானில் அமைந்துள்ள குவெட்டா ரயில் நிலையத்தில் பயங்கர குண்டுவெடிப்பு சம்பவம்…
சென்னை : புஷ்பா படத்தின் முதல் பாகத்தில் இடம்பெற்று இருந்த "ஓ சொல்றியா மாமா" பாடல் மிகப்பெரிய ஹிட்டாகி படத்தின்…
மும்பை : பொதுவாகவே, சினிமா துறையிலும் சரி, விளையாட்டுத் துறைகளிலும் சரி சில பிரபலங்கள் தங்களுடைய குழந்தைகளின் முகத்தை ஊடகத்திற்கு…
சென்னை : வரும் 2026 சட்டமன்ற தேர்தலை எதிர்கொள்ளும் வகையிலும், அந்த தேர்தலில் தேமுதிக கட்சியின் கட்டமைப்பைப் மேம்பபடுத்துவது தொடர்பாக…
சென்னை : தமிழகத்தில் சில இடங்களில் மின் பராமரிப்பு பணிகள் நடைபெற இருப்பதால் தினமும் மின்தடை ஏற்படுவது வழக்கம். எனவே,…