போதையால் மனைவியை கொலை செய்துவிட்டு, தற்கொலைக்கு முயன்ற கணவர்!

Published by
Rebekal

திருவாரூரில் போதையால் மனைவியை கொலை செய்த கணவர், பூச்சிமருந்தை குடித்து தற்கொலைக்கு முயன்றுள்ளார்.

திருவாரூர் மாவட்டத்தில் மன்னார்குடி அருகே உள்ள தென்பரை எனும் கிராமத்தை சேர்ந்த 60 வயதான பால்சாமி என்பவர் அடிக்கடி மது அருந்துவதை வழக்கமாகக் கொண்டுள்ளார். மேலும் மது அருந்திவிட்டு மனைவியிடம் அடிக்கடி தகராறு செய்து வருவது வழக்கம் என அக்கம்பக்கத்தினர் கூறுகின்றனர். இந்நிலையில் நேற்று மாலை மாரியம்மாள் வயல்வெளியில் ஆடு மேய்த்துக் கொண்டிருந்த போது மதுபோதையில் அவரது மனைவி மாரியம்மாளிடம் சென்ற பால்சாமி மனைவியுடன் தகராறு செய்துள்ளார். அதன்பின்பு ஆத்திரமடைந்த பால்சாமி தான் மறைத்து வைத்திருந்த அரிவாளால் மனைவியின் கழுத்து, தாடை  ஆகிய பகுதிகளில் வெட்டியுள்ளார். படுகாயமடைந்த  மாரியம்மாள் சம்பவ இடத்திலேயே பரிதாபமாக உயிரிழந்துள்ளார்.

மனைவி உயிரிழந்து விட்டதை அறிந்த பால்சாமி தனது வீட்டிற்கு சென்று பூச்சி மருந்தை குடித்து தற்கொலைக்கு முயன்ற போது, மது போதையில் இருந்ததால் சத்தமாக உளறியுள்ளார். இதனால் அருகில் இருந்தவர்கள் வந்து பார்த்து அவர் விஷம் அருந்தியது தெரிந்ததால் சிகிச்சைக்காக மன்னார்குடி அரசு மருத்துவமனையில் சேர்த்துள்ளனர். சம்பவம் குறித்து போலீசாருக்கு தகவல் தெரிவிக்கப்பட்டதை தொடர்ந்து சம்பவ இடத்திற்கு வந்த திருமக்கோட்டை போலீசார் உயிரிழந்த மாரியம்மாளின் உடலை கைப்பற்றி பிரேத பரிசோதனைக்காக மன்னார்குடி அரசு மருத்துவமனையில் சேர்த்துள்ளனர். மேலும் கொலைக்கான காரணம் குறித்தும் விசாரணை நடத்தி வருகின்றனர். இந்த முதிர்ந்த வயதிலும் மதுபோதையில் மனைவியை வெட்டிக் கொலை செய்துவிட்டு தற்கொலைக்கு முயன்ற கணவரால், அந்த கிராமம் மக்கள் அதிர்ச்சியடைந்துள்ளனர்.

Published by
Rebekal

Recent Posts

மத்திய அமெரிக்காவில் கோர விபத்து! பள்ளத்தில் கவிழ்ந்த பேருந்து., 55 பேர் பலி!

மத்திய அமெரிக்காவில் கோர விபத்து! பள்ளத்தில் கவிழ்ந்த பேருந்து., 55 பேர் பலி!

குவாத்தமாலா : மத்திய அமெரிக்க நாடுகளில் ஒன்றான குவாத்தமாலாவில் பிப்ரவரி 10 காலை உள்ளூர் பேருந்து சாலை பக்கவாட்டில் உள்ள…

22 minutes ago

பும்ரா வெளியே., வருண் உள்ளே! ஜெய்ஸ்வாலுக்கு ‘ஷாக்’! சாம்பியன்ஸ் டிராபி ‘புது’ அப்டேட் இதோ…

மும்பை : வரும் பிப்ரவரி 19ஆம் தேதி முதல் சாம்பியன்ஸ் டிராபி கிரிக்கெட் தொடர் தொடங்க உள்ளது. பாகிஸ்தான் நடத்தும்…

54 minutes ago

செங்கோட்டையன் வீட்டிற்கு கூடுதல் போலீஸ் பாதுகாப்பு! என்ன நடக்கிறது அதிமுகவில்?

கோவை : அதிமுக கட்சிக்குள் என்ன நடக்கிறது? எடப்பாடி பழனிச்சாமிக்கும் செங்கோட்டையனுக்கும் இடையே என்ன பிரச்சனை, என்று அரசியல் வட்டாரத்தில்…

2 hours ago

”உங்களின் படங்களோடு நிறுத்திக்கொள்ளுங்கள்” – லிவிங் ஸ்மைல் வித்யா காட்டம்.!

சென்னை : தவெக தலைவர் விஜய்யை தேர்தல் வியூக வகுப்பாளர் பிரசாந்த் கிஷோர் சென்னையில் இன்று இரண்டாவது நாளாக சந்தித்து…

12 hours ago

பெயிண்டராக இருந்து நடிகராக உயர்ந்ததை நினைவுக்கூர்ந்து நடிகர் சூரி பதிவு!

மதுரை : நகைச்சுவை நடிகராக நடித்து தற்போது ஹீரோவாக மாஸ் காட்டி வரும் நடிகர் சூரி, ஹீரோவான பிறகும் நகைச்சுவை…

13 hours ago

க்ரிப்டோ கரன்சி விளம்பரம் செய்த த்ரிஷா? அதிர்ச்சியின் அடுத்த நொடியே இன்ஸ்டாவில் அந்த பதிவு.!

சென்னை : நடிகை த்ரிஷாவின் எக்ஸ் தள பக்கத்தில் திடீரென க்ரிப்டோ கரன்சி விளம்பரம் வந்ததால், ரசிகர்கள் அதிர்ச்சியடைந்தனர். அதில், அவர்…

13 hours ago