விடிய விடிய மனைவியின் அழகை ரசித்துவிட்டு, 30 கிலோ கல்லை போட்டு கொன்ற கணவன்!

விடிய விடிய மனைவியின் அழகை ரசித்துவிட்டு, சந்தேகத்தில் 30 கிலோ கல்லை போட்டு கொன்ற கணவன் கைது.
கிருஷ்ணகிரி மாவட்டத்தில் உள்ள ஊத்தங்கரையில் தையல் தொழில் செய்துவரக்கூடியவர் தான் தங்கராஜ். இவரது அழகிய மனைவி தான் ருக்மணி. இவர்கள் இருவருக்கும் கடந்த 12ஆண்டுகளுக்கு முன்பே திருமணமாகியிருந்தாலும், குழந்தை பாக்கியம் கிடைக்கவில்லை. இந்நிலையில், குடிப்பழக்கத்துக்கு மிகவும் அடிமையாகியும் இருந்துள்ளார். வீட்டுக்கு பணம் கொடுக்காமல் மனைவியை சந்தேகப்பட்டு அடிக்கடி தங்கராஜ் தகராறு செய்வது வழக்கம். சமைக்க கூட இவர் சரியாக பணம் கொடுக்காததால் ருக்மணி கம்பனி ஒன்றில் பணிபுரிந்து வந்துள்ளார். ருக்மணி அழகாக இருப்பதால் தங்கராஜ் அவரை அதிகம் சந்தேகப்படுவாராம்.
அது போல ஒரு நாள் எதோ வாக்குவாதம் ஏற்பட்டுள்ளது. தங்கராஜ் அதிகமாக பேசிக்கொண்டேயிருந்ததால் அவரை கண்டுகொள்ளாமல் ருக்மணி தூங்க சென்றுள்ளார். விடிய விடிய மனைவியை பார்த்துக்கொண்டே இருந்த தங்கராஜ் சந்தேகத்தின் உச்சிக்கு சென்றதால், 30 கிலோ எடையுள்ள கல் ஒன்றை எடுத்து அவரது மனைவி தலையில் போட்டுள்ளார். தூங்கிக்கொண்டிருந்தவரே நடந்த இந்த சம்பவத்தால் அந்த இடத்திலேயே துடித்து ருக்மணி இறந்துள்ளார். அக்கம்பக்கத்தினர் அளித்த தகவலின் அடிப்படையில் வந்த போலீசார் தங்கராஜை கைது செய்து விசாரித்து வருகின்றனர்.
லேட்டஸ்ட் செய்திகள்
சென்னையில் கால்பந்து போட்டி.., போக்குவரத்து மாற்றம்.! ரூட்டை பார்த்து தெரிஞ்சிக்கோங்க…
March 29, 2025
தனக்குத்தானே எக்ஸ் தளத்தை வியாபாரம் செய்த எலான் மஸ்க்.! வாங்குனது எவ்வளவு? விற்றது எவ்வளவு?
March 29, 2025