திருச்சி மாவட்டத்தில் உள்ள துறையூர் அருகே வேங்கடத்தானூர் கிராமத்தின் தெற்கு காலனியை சேர்ந்தவர் பிரபாகரன் ஆவார்.இவர் மருவத்தூரில் உள்ள வெடிமருந்து ஆலையில் பணி புரிந்து வந்துள்ளார்.
இவர் கடந்த சில நாட்களாக வேலைக்கு செல்லாததாகவும் அதே சமயத்தில் பக்கத்து வீட்டுக்காரர் சந்திரகுமார் என்பவரின் மனைவி மணிமேகலைக்கும் இவருக்கும் தவறான உறவு இருந்ததாகவும் கூறப்படுகிறது.
இதை அறிந்த சந்திரகுமார் இருவரையும் அழைத்து கண்டித்துள்ளார்.ஆனால் அவர்கள் கேட்டவாறு இல்லாததால் ஆத்திரம் அடைந்த சந்திரகுமார் பிரபாகரனின் வீட்டிற்கு சென்றுள்ளார்.
பின்னர் அங்கு உறங்கி கொண்டிருந்த பிரபாகரனின் மீது மண்ணெண்ணையை ஊற்றி எரித்துள்ளார்.இந்த சம்பவத்தில் பிரபாகரன் பரிதாபமாக உயிரிழந்துள்ளார்.இதன் காரணமாக காவல்துறையினருக்கு தகவல் கிடைத்துள்ளது.
தகவலின் அடைப்படையில் சம்பவ இடத்திற்கு விரைந்து வந்த காவல்துறையினர் பிரபாகரின் உடலை பிரேத பரிசோதனைக்கு அனுப்பிவைத்துள்ளனர்.பின்னர் விசாரணை மேற்கொண்டு வந்துள்ளனர்.
பின்னர் சந்திரகுமார் மற்றும் அவரின் தந்தை முத்துகுமாரை கைது செய்து சிறையில் அடைத்துள்ளனர்.இந்த சம்பவம் அப்பகுதியில் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.
சென்னை : கடந்த ஆண்டு செப்டம்பர் மாதம் சென்னை அருகில் பாலியல் வன்கொடுமை தொடர்பாக சிறுமியின் பெற்றோர் புகார் அளிக்க சென்றபோது…
சென்னை: பொங்கல் பண்டிகையை முன்னிட்டு, 2.2 கோடி குடும்ப அட்டைதாரர்களுக்கு பொங்கல் பரிசு தொகுப்பு வழங்கப்பட உள்ளது. நாளை (9ஆம்…
தென்னாப்பிரிக்கா : SA20 கிரிக்கெட் போட்டி என்பது தென்னாப்பிரிக்காவில் நடைபெறும் 20 ஓவர் கிரிக்கெட் போட்டி ஆகும். இந்த போட்டியில் 6…
சென்னை : சட்டப்பேரவை கூட்டத்தொடரை 11ஆம் தேதி வரை நடைபெறும் என அறிவிக்கப்பட்டிருந்த நிலையில், நேற்று இரண்டாவது நாளில் மறைந்த காங்கிரஸ்…
சென்னை : ஜெயம் ரவிக்கு ஜோடியாக நித்யாமேனன் நடித்துள்ள காதலிக்க நேரமில்லை திரைப்படத்தின் இசை மற்றும் ட்ரெய்லர் வெளியீட்டு விழா சென்னையில்…
சென்னை : பொங்கல் பண்டிகையை முன்னிட்டு இந்த ஆண்டு மதுரை மாவட்டத்தில், அவனியாபுரம், பாலமேடு மற்றும் அலங்காநல்லூர் போன்ற இடங்களில் ஜனவரி…