கிருஷ்ணகிரி மாவட்டம், ஊத்தங்கரை அருகவே உள்ள சிங்காரப்பேட்டை நார்ச்சம்பட்டி பெருமாள் கோவில் தெருவை சேர்ந்தவர், சக்திவேல். 38 வயதாகும் இவர், கேரளாவில் ஜேசிபி ஆபரேட்டராக பணிபுரிந்து வந்தார். இவருக்கு நதியா (32) என்ற மனைவி, மதன் (9) என்ற மகனும், வைஷ்ணவி (6) என்ற மகளும் உள்ளனர்.
இவர், கேரளாவில் பணியை முடித்து வீட்டிற்கு வரும்போதெல்லாம் அவரின் மனைவியின் நடத்தையில் சந்தேகப்பட்டு நதியாவிடம் தகராறு செய்வார். அதைப்போலவே, தற்பொழுதும் சண்டை வந்துள்ளது. இதில் ஆத்திரமடைந்த சக்திகுமார், தனது கையில் கத்தியை எடுத்து நதியாவின் கழுத்தை அறுத்துள்ளார்.
இதில் ரத்த வெள்ளத்தில் சம்பவ இடத்திலே நதியா உயிரிழக்க, சக்திவேலும் தன்னுடைய கழுத்தை அறுத்து தற்கொலைக்கு முயன்றுள்ளார். தகவலறிந்து சம்பவ இடத்திற்கு விரைந்த காவல் துறையினர், இருவரையும் மீட்டனர். நதியாவின் உடலை பிரேத பரிசோதனைக்கு அனுப்பி, சக்திகுமாரின் உடலை மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர். மேலும், இச்சம்பவம் குறித்து வழக்குப்பதிவு செய்து, விசாரணையை தொடங்கவுள்ளனர்.
டெல்லி : இணையத்தில் அவ்வப்போது போலி செய்திகள் அந்தந்த சூழலுக்கு ஏற்ப பலரை நம்ப வைக்கும்படி போலி செய்திகள் உலா…
ஜெய்ப்பூர் : ஐபிஎல் கிரிக்கெட் தொடரின் இன்றைய போட்டியில் ராஜஸ்தான் - குஜராத் அணிகள் மோதுகின்றனர். ராஜஸ்தானின் ஜெய்ப்பூரில் நடைபெறும்…
சென்னை : நேற்றைய விடுமுறை தினத்தை தொடர்ந்து இன்று காலை அவை தொடங்கியதும், கலைஞர் பல்கலைக்கழகம் அமைப்பது குறித்த சட்ட…
டெல்லி : 2025ம் ஆண்டுக்கான பத்மபூஷன் விருதுகளை இன்று மாலை வழங்குகிறார் குடியரசுத் தலைவர் திரௌபதி முர்மு. டெல்லியில் உள்ள…
தெஹ்ரான்: ஈரானின் தெற்கு மாகாணமான ஹோர்மோஸ்கானில் உள்ள துறைமுகத்தில் கடந்த சனிக்கிழமை ஏற்பட்ட பயங்கர வெடிவிபத்தில் உயிரிழந்தவர்களின் எண்ணிக்கை 40…
டெல்லி : நடப்பு ஐபிஎல் தொடரில் நெற்றிரவு நடைபெற்ற போட்டியில் பெங்களூர் மற்றும் டெல்லி அணிகள் மோதியது. இதற்கான டாஸில்…